Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பஞ்சாப் அரசின் கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான நாபா மத்திய எருமைகள் ஆராய்ச்சி நிலைய வளாகத்தின் வனப்பகுதியில் உள்ள கால்வாய்க்கு அருகில் அமைந்திருக்கும் 72 ஏக்கர் 3 மர்லா நிலம் குத்தகைக்கு அளிக்கப்பட்டதை மீண்டும் திரும்பப் பெறுவதற்கான அனுமதி


பஞ்சாப் மாநிலம் நாபா என்ற இடத்தில் பஞ்சாப் மாநில அரசின் கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான மத்திய எருமைகள் ஆராய்ச்சி நிலைய வளாகத்தின் வனப்பகுதியில் உள்ள கால்வாய்க்கு அருகில் அமைந்திருக்கும் 72 ஏக்கர் 3 மர்லா நிலம் குத்தகைக்கு அளிக்கப்பட்டதை மீண்டும் திரும்பப் பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த நிலம் ரவுனி (பாட்டியாலா) கால்நடைப் பண்ணையின் கால்நடைகள் பராமரிக்க பயன்படும்.

விடுவிக்கப்பட்ட நிலம் மாட்டுத் தீவனத்தை உற்பத்தி செய்வதற்கான பண்ணையாக பஞ்சாப் அரசு அளிக்கும் உறுதிமொழியின் அடிப்படையில் வழங்கப்படும். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய எருமைகள் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை மாட்டுத் தீவனத்திற்கான ஆராய்ச்சிக்கான உதவிகளை வழங்கும். (எந்த நிதி செலவினமும் இல்லாமல்)

நவீன முறையிலான கால்நடை பண்ணை ஒன்றை பஞ்சாப் அரசு அமைக்க ஆணையிட்டுள்ளது. அதற்கான கட்டுமானப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் 300 கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கும் வகையில் மட்டும் நிலம் உள்ளது. ஆகவே, பஞ்சாப் அரசு மத்திய எருமை ஆராய்ச்சி நிலையத்திடமிருந்து இந்த நிலத்தை திரும்பப் பெற்றுள்ளது. ரவுனி கால்நடை பண்ணையின் தீவனங்களை அளிக்க இதுபோன்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.

•••••••