Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பின்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்


பின்லாந்து நாட்டின் பிரதமர் திரு. ஜூகு சிபிலாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி திங்கட்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார்.

வரலாற்று சிறப்பு மிக்க சரக்கு மற்றும் சேவை வரியினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு பின்லாந்து பிரதமர் சிபிலா வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 2016, பிப்ரவரியில் மும்பையில் நடைபெற்ற “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்“ வார கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வருகை தந்த பிரதமர் சிபிலாவுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட சந்திப்பிற்குப் பிறகு இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் உரையாடினர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.