Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன், இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி வாயிலாகப் பேச்சு


பிரதமர் திரு நரேந்திர மோடி‌ உடன், இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டுப் பேசினார்.

இந்திய-இஸ்ரேல் சிறப்பு உத்திசார் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்ததுடன், இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காகப் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினர்.

மேற்கு ஆசியாவில் நிலவும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தங்கள்  கருத்துகளைத் தலைவர்கள் இருவரும் பரிமாறிக் கொண்டனர்.

எதிர்காலத்தில் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்க  இரு தலைவர்களும் இசைவு தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295679&reg=48&lang=2      

***

 TV/BR/SE