Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தலைமையில் உகட்டமைப்பு துறைகள் உயர் நிலை கூட்டம்


s2015020962073 [ PM India 188KB ]

 

s2015020962074 [ PM India 197KB ]

 

s2015020962075 [ PM India 210KB ]

உள்கட்டமைப்பு திட்டங்களின் செயல்பாடுகளை துரிதப்படுத்த பல்வேறு துறைகளுக்கு இடையேயான பிரச்சனைகளையும் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சனைகளையும் நிதி அயோக் விரைவாக தீர்க்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். உள்கட்டமைப்பு பிரிவுகளின் உயர் நிலைக் குழு கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். எரிசக்தி, நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துறைமுகங்கள், கடலோர பகுதிகள் வளர்ச்சி, சாலைகள், ரயில்வே என பல்வேறு துறைகளின் உள்கட்டமைப்பு பற்றி நிதி ஆயாக் விளக்கம் அளித்தது.

தெளிவாக வரையறுக்கப்பட்ட காலக் கட்டத்திற்குள் மின்சார வசதி இல்லாத 20,000 கிராமங்களில் மின்சாரவசதியை விரைவில் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் துரிதமாக செயல்பட வேண்டும் எனப்பிரதமர் கேட்டுக்கொண்டார். மொத்த கிராமங்களையும் மின்சார மயமாக்குதலை உறுதி செய்ய சூரிய ஆற்றல், அருகிலுள்ள ரயில் உள்கட்டமைப்பு மூலம் மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறித்தினார். தற்போது, செயல்பாட்டில் உள்ள எரிசக்தி ஆலைகளுக்கு நிலக்கரி விநியோகித்தல் குறித்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் எந்த ஒரு ஆலைகளிலும் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை எனவும் அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர். நாட்டின் சூரிய சக்தி திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களை பிரதமர் ஆய்வு செய்தார். அனைத்து முக்கிய (கிரிக்கட்) மட்டைபந்து விளையாட்டு அரங்கங்களிலும் மின் நுகர்வை பொதுவான மின்னாற்றலில் இருந்து சூரிய ஆற்றலுக்கு மாற்றும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் இணைத்து கொள்ளும்படி அவர் ஆலோசனை வழங்கினார்.

கடலோர மேம்பாடு குறித்த செய்யபாடுகளை பிரதமர் ஆய்வு செய்தார். அப்போது, நீலப்புரட்சி, சாகர்மாலா திட்டத்தின் மூலம் கப்பல் போக்குவரத்தை ஒருங்கிணைத்தல், சுற்றுலா, வட்டார வளர்ச்சி குறித்த தனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தினார்.

ரயில் நிலையங்கள் மேம்பாடு மற்றும் நாட்டின் முக்கிய நகரங்கள் வழியில் இயங்கும் ரயில் இணைப்புப் பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளின் வளர்ச்சி குறித்த அணுகுமுறையில் ஒரு அடிப்படை மாற்றத்தை உருவாக்குவதற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

சமீபத்தில் நடந்த பிளாக்ராக் இந்திய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் சர்வதேச முதலீட்டாளர்கள் உடன் நடைப்பெற்ற தனது சந்திப்பை குறிப்பிட்டு பேசுகையில் உள்கட்டமைப்புத் துறையில் நிதி ஒதுக்கீடுகள் இனி ஒரு பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை என்பதை பிரதமர் தெரிவித்தார். முதலீட்டுக்கு உகந்த சுழலை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமர் ஆணையிட்டார்.

உள்கட்டமைப்பு துறை தொடர்பான அனைத்து அரசு உயர் அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், நிதி அயோக் அதிகாரிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.