பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஒரு மாபெரும் தத்துவஞானி, தேசியவாதி, கவிஞர், சிந்தனையாளரான ஸ்ரீ அரவிந்தர், இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், மனிதகுல முன்னேற்றத்திற்கான பரந்த தேடலுக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு துறைகளில் அவரது படைப்புகள் உலகெங்கிலும் உள்ள தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமாக, நமது நாட்டின் எதிர்காலத்தின் மீதும், மனிதகுல மாற்றத்திற்கான எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் மீதும் ஸ்ரீ அரவிந்தர் கொண்டிருந்த நம்பிக்கை இன்றும் ஆழமான பொருத்தமுடையதாக விளங்குகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம்.
ஒரு மாபெரும் தத்துவஞானி, தேசியவாதி, கவிஞர், சிந்தனையாளரான ஸ்ரீ அரவிந்தர், தமது வாழ்நாளை இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், மனிதகுல முன்னேற்றத்திற்கான பரந்த தேடலுக்காகவும் அர்ப்பணித்தார். பல்வேறு அம்சங்களில் அவர் உருவாக்கிய படைப்புகள், உலகெங்கிலும் உள்ள தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகின்றன. மிக முக்கியமாக, நமது நாட்டின் எதிர்காலத்தின் மீதும், மனிதகுல மாற்றத்திற்கான எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் மீதும் அவர் கொண்டிருந்த நம்பிக்கை, இன்றும் ஆழமான பொருத்தமுடையதாக விளங்குகிறது.”
****
(Release ID: 2299747)
SS/PLM/RJ
Remembering Sri Aurobindo on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 15, 2026
A towering philosopher, nationalist, poet and thinker, Sri Aurobindo dedicated his life to India’s freedom as well as to the larger quest for human progress. His works on various subjects continue to inspire generations across… pic.twitter.com/sEBTfCezMm
শ্রী অরবিন্দকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি।
— Narendra Modi (@narendramodi) August 15, 2026
একজন বিশিষ্ট দার্শনিক, জাতীয়তাবাদী, কবি এবং চিন্তাবিদ, শ্রী অরবিন্দ তাঁর জীবনকে ভারতের স্বাধীনতার পাশাপাশি মানব অগ্রগতির বৃহত্তর অনুসন্ধানে উৎসর্গ করেছিলেন। বিভিন্ন বিষয়ে তাঁর কালজয়ী সৃষ্টি বিশ্বজুড়ে প্রজন্ম থেকে প্রজন্মকে… pic.twitter.com/K393Cu7qnI