Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்


பிரதமர் திரு நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்:

புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும்:

1. இந்தியாவுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் 2026-30-ம் ஆண்டு வரையிலான கலாச்சாரப் பரிமாற்றத் திட்டம்.

2. உஸ்பெகிஸ்தானின் டெர்மெஸ் நகரில் அமைந்துள்ள ஃபயாஸ் டெப்பா, காரா டெப்பா ஆகிய பழங்கால பௌத்தத் தலங்களைப் பாதுகாத்தல், புனரமைத்தல் தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும் உஸ்பெகிஸ்தான் கலாச்சார பாரம்பரிய முகமைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தக் கடிதம்.

3. இந்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பாரம்பரிய ஆவணக்காப்பகத்திற்கும், உஸ்பெகிஸ்தான் அரசின் சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ளஉஸ்ஆர்கைவ்முகமைக்கும் இடையே ஆவணக்காப்பகப் பணிகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4. இந்திய அரசுக்கும் உஸ்பெகிஸ்தான் அரசுக்கும் இடையே ஆயுர்வேதம், பிற பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

5. இந்திய சுரங்க அமைச்சகத்திற்கும், உஸ்பெகிஸ்தான் சுரங்கத் தொழில் அமைச்சகத்திற்கும் இடையே, புவியியல், கனிம வளங்கள் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

6. இந்திய சுற்றுலா அமைச்சகத்திற்கும் உஸ்பெகிஸ்தான் சுற்றுலா அமைச்சகத்திற்கும் இடையில் சுற்றுலாத் துறை ஒத்துழைப்புக்கான கூட்டுத் திட்டம்( 2026-28 வரை)

7. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டுச் சேவை நிறுவனத்திற்கும், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உலகப் பொருளாதார பல்கலைக்கழகத்தின் தூதரகக் கல்விக்கழகத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

8. இந்திய நிதி அமைச்சகத்திற்கும், உஸ்பெகிஸ்தான் நிதி அமைச்சகத்திற்கும் இடையே பொருளாதார, நிதி ஆலோசனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

9. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும், உஸ்பெகிஸ்தான் சுற்றுச் சூழலியல் தேசியக் குழுவிற்கும் இடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம்.

10. இந்திய அரசுக்கும் உஸ்பெகிஸ்தான் அரசுக்கும் இடையே உயர்கல்வியிலும், அறிவியல் ஆராய்ச்சித் துறையிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.

11. இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கும், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதிக்கும் இடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம்.

அறிவிப்புகள்

1. இந்தியாஉஸ்பெகிஸ்தான் ஒத்துழைப்பை ஒரு விரிவான உத்திசார் ஒத்துழைப்பாக உயர்த்துதல்

2. ஆரல் கடல் பகுதியில் காடு வளர்ப்பிற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம்

3. இந்தி மொழிக்கான லால் பகதூர் சாஸ்திரி கல்வி உதவித்தொகை (100 கல்வி உதவித்தொகைகள்)

4. தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தில் இந்திய கலாச்சார உறவுகள் குழு சாழ்பில் சமஸ்கிருத இருக்கை அமைத்தல்

5. உஸ்பெகிஸ்தானில் வணிகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக, இந்தியாவின் யுபிஐ செயலிகளை ஸ்கேன் செய்ய வழிவகை செய்யும் வணிக ஒப்பந்தமானது, இந்தியாவின் என்பிசிஐ, உஸ்பெகிஸ்தானின் நேஷனல் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தை செயல்முறை மையம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.

***

(Release ID: 2304704)

SS/PLM/RJ