பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை அருணாச்சல பிரதேசம், ஜார்கண்ட் செல்ல இருக்கிறார். அங்கு ஹர்முதி-நாகர்லகுன் ரயில் பாதையை நாட்டிற்கு அர்பணிக்கிறார். மேலும், நடக்கும் ஒரு விழாவில் நாகர்லகுன்- புது தில்லியிலான குளிர்சாதன ரயிலையும் நாகர்லகுன்- குவாஹத்தி இடையிலான விரைவு ரயிலையும் துவக்கிவைக்க உள்ளார்.
அதன் பின், “அருணாசல் 2015” என்ற விழாவை பிரதமர் தொடங்கிவைக்கிறார். இட்டாநகரில் குடிநீர் விநியோக திட்டத்தை துவக்கி வைக்கும் அவர் 132 கிலோ வாட் மின் இணைப்பிற்காக அடிக்கல் நாட்டுகிறார்.
பிற்பகல் ஹசாரிபாக்- கோடர்மா இடையேயான புதிய ரயில் பாதையை துவக்கிவைக்கிறார். இந்த விழா ஹசாரிபாக்கில் நடைப்பெறும்.
Will join programmes in Arunachal Pradesh and Jharkhand tomorrow. http://t.co/YdRXtszvqJ
— NarendraModi(@narendramodi) February 19, 2015