Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர், நெதர்லாந்தின் மாண்புமிகு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்சிமா ஆகியோரைச் சந்தித்தார்

பிரதமர், நெதர்லாந்தின் மாண்புமிகு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்சிமா ஆகியோரைச் சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹேக்கில் உள்ள ஹுயிஸ் டென் போஷ் அரண்மனையில், நெதர்லாந்தின் மாண்புமிகு மன்னர் வில்லெம்அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்சிமா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

இரு நாட்டு மக்களுடனான உறவுகளை ஆழப்படுத்துவது உள்ளிட்ட வழிகளில் இந்தியநெதர்லாந்து உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமரும், மாண்புமிகு மன்னரும், அரசியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பரஸ்பர நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இருதரப்பு உறவுக்குப் புதிய உத்வேகம் அளிப்பதிலும் முக்கியப் பங்காற்றிய, மாண்புமிகு மன்னர் மற்றும் அரசியின் 2019-ஆம் ஆண்டு இந்திய பயணத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். கல்வி, புத்தாக்கம், செமிகண்டக்டர், டிஜிட்டல், நீர் மற்றும் பசுமைக் கூட்டாண்மை ஆகிய துறைகளில் நடைபெற்று வரும் இருதரப்பு முன்னெடுப்புகள் குறித்து தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

பிரதமர், இந்தியா மீதான மாண்புமிகு மன்னர் மற்றும் அரசியின் நல்லெண்ணத்தைப் பாராட்டியதுடன், தனது பயணத்தின் போது தமக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்தார்பிரதமருக்கு மரியாதை செலுத்தும் வகையில்மதிப்பிற்குரிய  மன்னரும் அரசியும், அவருக்கு மதிய விருந்து அளித்தனர்.

***

(Release ID: 2261824)

TV/RB/RJ