Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மோடிக்கு அதிபர் புதினின் பரிசு

பிரதமர் மோடிக்கு அதிபர் புதினின் பரிசு


ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின் பிரதமர் திரு நரேந்திர மோடியை அதிபர் மாளிகையான கிரெம்ளினில் புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

மகாத்மா காந்தியின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்தை இந்த சந்திப்பின் போது ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடிக்கு பரிசு அளித்தார். இதில் மகாத்மா காந்தியடிகள் கைப்பட எழுதிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளது.

வங்காள மாகாணத்தை சேர்ந்த 18 வது நூற்றாண்டின் பிற்பகுதியில் பயன்படுத்தப்பட்ட வாளினை பரிசளித்தார். இந்த வாளில் நுணுக்கமான வெள்ளி வேலைப்பாடுகள் இடம்பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

***