பி.எம்.இந்தியா
பாலியா மாவட்டத்திலிருந்து வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் “பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தை” தொடங்கி வைக்கிறார்
வாரணாசியில் பல நிகழ்சிகளில் பங்குபெறுவார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் “பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தை” பாலியா மாவட்டத்தில் இருந்து பிரதமர் துவக்கிவைப்பார். இத்திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஐந்து கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கப்படும்.
பிரதமரின் தொகுதியான வாரணாசியிலும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். அப்போது பயனாளிகளுக்கு இ-ரிக்ஷா வழங்குவார். வாரணாசியில் உள்ள கலாச்சார ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையமான ‘ஞான் பிரவாஹை பார்வையிடுவார். மேலும் வாரணாசியில் உள்ள பிரமுகர்களை சந்தித்து உரையாடுவார்.
பிரசித்தி பெற்ற அஸ்ஸி காட் என்ற இடத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் சுற்றுசூழலுக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டிருக்கும் ‘இ-படகுகளை’ துவக்கிவைப்பார். இதன் மூலம் மாசு குறைவதோடு செயல்பாட்டு செலவுகளும் குறையும். இதனால் கங்கையில் படகோட்டுபவர்கள் இந்த படகுகள் மூலம் அதிக வருமானம் பெறுவார்கள்.