Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரான்ஸ் அமைச்சர் திரு. லாரன்ட் பேபியஸ் பிரதமருடன் சந்திப்பு


s2015020561948 [ PM India 154KB ]

பிரான்ஸ் வெளியுறவு துறை மற்றும் சர்வதேச வளர்ச்சி அமைச்சர் திரு. லாரன்ட் பேபியஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபங்கள். பிரான்ஸ் மக்களுடன் இந்தியா இணைந்திருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

s2015020561949 [ PM India 161KB ]

கடந்த ஆண்டு ஜி-20 மாநாட்டின் போது பிரிஸ்பேனில் அதிபர் ஹாலந்த் சந்தித்ததை நினைவு கூறிய பிரதமர் ஏப்ரலில் தான் மேற்கொள்ள உள்ள பிரான்ஸ் பயணம் தனக்கு ஆர்வம் அளிப்பதாக தெரிவித்தார்.

சுதந்திரமான அந்நிய நேரடி முதலீட்டு பார்வையில், பல்வேறு துறைகளில் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின் பலனை பெற பிரான்ஸ் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்புவிடுத்தார்.

விண்வெளி, பாதுகாப்பு, ரயில்வே, ஸ்மார்ட் சிட்டி, சுற்றுலா, நிலையான வளர்ச்சி, எரிசக்தி, தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து பிரதமர் திரு. மோடியும் திரு. பேபியஸ்ம் பேச்சு வார்த்தை நடத்தினர்.