Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் தீவிரவாதத் தாக்குதல் – பிரதமர் கண்டனம்


பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நைஸ் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர தாக்குதல் அதிர்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற மனித நேயமற்ற செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த துயர தருணத்தின் போது பிரான்ஸ் நாட்டில் உள்ள சகோதர சகோதரிகளுடன் இந்தியா என்றும் துணை நிற்கும்”. என்று பிரதமர் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.