பி.எம்.இந்தியா
தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகின் நலனுக்காக வழிநடத்தப்படும் பல்வேறு விவகாரங்களில் நேர்மறையான, அர்த்தமுள்ள விவாதங்களுக்கு இந்த உச்சி மாநாடு சான்றாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சமஸ்கிருத நீதிமொழியையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு நபர் எப்பொழுதும் நல்ல பண்புகளைக் கொண்ட நபர்களிடையே வாழ்ந்து அவர்களது நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த சமஸ்கிருத நீதிமொழி உணர்த்துகிறது. பரஸ்பர நல்லெண்ணம், நட்புறவு ஆகியவை அமைதி, ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன. எனவே கலந்துரையாடல்களில் நற்பண்பு கொண்ட நபர்களுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
***
(Release ID: 2308995)
SS/SV/SM/RJ
अगले कुछ दिनों में दुनियाभर के नेता BRICS Summit के लिए जुटेंगे। पूर्ण विश्वास है कि सम्मेलन में विश्व कल्याण की कामना के साथ विभिन्न मुद्दों पर सकारात्मक और सार्थक चर्चा होगी।
— Narendra Modi (@narendramodi) September 11, 2026
सद्भिरेव सहासीत सद्भिः कुर्वीत सङ्गतिम्।
सद्भिर्विवादं मैत्रीं च नासद्भिः किंचिदाचरेत्॥ pic.twitter.com/YG36WlpiYg