Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு ஆண்டி பர்ன்ஹாமுக்கு பிரதமர் வாழ்த்து


பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு ஆண்டி பர்ன்ஹாமுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திரு மோடி இந்தியாவும், பிரிட்டனும் பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, இருநாட்டு மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகியவற்றின் விரிவான ஒத்துழைப்பை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதன் மூலம் இருதரப்பு கூட்டாண்மை மேலும் வலிமையுடன் வளர்ச்சியடையும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியா-பிரிட்டன் இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், தங்களுடைய பகிரப்பட்ட 2035 தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்தவும், தாம் அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

“பிரிட்டன் பிரதமாக பொறுப்பேற்றுள்ள திரு ஆண்டி பர்ன்ஹாமுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தியாவும், பிரிட்டனும் பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, இருநாட்டு மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகியவற்றின் விரிவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. இம்மாதம் விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதன் மூலம் இருதரப்பு கூட்டாண்மை மேலும் வலிமையுடன் வளர்ச்சியடையும்.

இந்தியா-பிரிட்டன் இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், நமது பகிரப்பட்ட 2035 தொலைநோக்குப்பார்வையை மேம்படுத்தவும் நான் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்.”

***

(Release ID: 2286881)

SS/IR/SU