பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் நடைபெற்ற என்டிடிவி உலகளாவிய உச்சிமாநாடு 2026-ல் உரையாற்றினார். நாட்டில் மகிழ்ச்சி நிறைந்த பண்டிகைக் காலம் நிலவும் வேளையில் சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த பங்கேற்பாளர்களை வரவேற்றார்.
உலகளாவிய மாற்றங்கள் தற்போது சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிப்பதால், ஒரு புதிய உலக ஒழுங்கு குறித்த விவாதங்கள் எங்கும் பரவலாகிவிட்டன என்று பிரதமர் குறிப்பிட்டார். இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற உலக உச்சிமாநாடுகளின் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள ஒழுங்கு ஏன் மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், பாரம்பரிய அமைப்புகள் தற்கால நெருக்கடிகளைத் தீர்ப்பதில் ஏன் தோல்வியடைகின்றன என்பதையும் உலக சமூகம் அடிப்படையாக ஆராய வேண்டும் என்று அவர் கூறினார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது, உலக அரங்கில் தேசத்தின் பொறுப்புகளை ஆராய்வதற்கு இயல்பாகவே வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மாறிவரும் இந்த உலகில் இந்தியாவின் பங்கு என்ன என்றும் திரு நரேந்திர மோடி விளக்கினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அதிகாரத்தை விட உரையாடலும் ஒத்துழைப்பும் மேலோங்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார். இருப்பினும்,உலகளாவிய நிறுவனங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தவறிவிட்டன என்று அவர் தெரிவித்தார். வர்த்தகம், தொழில்நுட்பம், கடல்வழிப் பாதைகள் போன்ற இணைப்புகள் இப்போது ஆயுதமயமாக்கல், மோதல், புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவற்றுக்கான களங்களாக உருமாறியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். நிறுவன ரீதியான முடிவெடுக்கும் செயல்முறைக்கும் தற்போதைய யதார்த்தங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒழுங்கை உருவாக்குவதே நவீன காலத்தின் கட்டாயம் என்று அவர் வலியுறுத்தினார். இங்கிருந்தே, இந்தியாவின் பங்கு முன்னுக்கு வருகிறது என்று பிரதமர் கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் மருந்துகளையும் வழங்க இந்தியா முன்வந்ததை அவர் நினைவு கூர்ந்தார். அனைவரும், இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற அடிப்படைக் கொள்கையை விளக்கிய பிரதமர், இந்தியா எவ்வாறு உலகின் நண்பனாகத் தனது பங்கையும் சொந்த திறன்களையும் வலுப்படுத்தியுள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
பல்வேறு முன்னேற்றங்களை தேசத்தின் மாற்றத்தின் அடையாளமாகக் குறிப்பிட்ட பிரதமர், நாடு தனது பாரம்பரிய பலங்களை வலுப்படுத்திக் கொள்வதோடு, முற்றிலும் புதிய துறைகளில் ஒரு வலிமையான சக்தியாகவும் உருவெடுத்து வருவதாகக் கூறினார்.
நாம் பெரிய கனவுகளைக் காண்பதோடு, ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்றி நமது தீர்மானங்களை நிறைவேற்றுவோம் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327006®=3&lang=1
(Release ID : 2327006)
TV/PLM/SH
Speaking at the NDTV World Summit. @ndtv https://t.co/JFVAkeRZWQ
— Narendra Modi (@narendramodi) October 22, 2026
The changing world order calls for stronger global institutions, a greater voice for the Global South and international cooperation that stands firm in times of crisis. https://t.co/vGxL8xZSyW
— PMO India (@PMOIndia) October 22, 2026
Viksit Bharat is not just a promise for its people, but a guarantee of a better world. https://t.co/XFDMCTmZcK
— PMO India (@PMOIndia) October 22, 2026
India is strengthening its own capabilities to help strengthen the world. https://t.co/Qc3NljPQPW
— PMO India (@PMOIndia) October 22, 2026
From Back Office to Brain Office of the world. https://t.co/hG0CZpPhiP
— PMO India (@PMOIndia) October 22, 2026