Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான வரைவு ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையிடம், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இடையே உருவாக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான பொதுவான அம்சங்கள் குறித்த வரைவு ஒப்பந்தம் குறித்து விளக்கப்பட்டது. இந்த வரைவு ஒப்பந்தம், ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் இளவரசர் 11 பிப்ரவரி அன்று புதுதில்லிக்கு வருகை தந்திருந்தபோது கையொப்பம் இடப்பட்டது.

புதுப்பிக்கத்தக்க மற்றும் தூய்மையான எரிசக்தி தொடர்பான அறிவு பகிர்தல், திட்டங்கள், முதலீடுகள், வணிக முதலீடுகள், ஆராய்ச்சி, போன்றவற்றில் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேற்கொள்ள ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே இந்த வரைவு ஒப்பந்தத்தின் நோக்கம். புதுப்பிக்கத்தக்க மற்றும் தூய்மையான எரிசக்தித் துறையில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இடையே ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதே இந்த வரைவு ஒப்பந்தத்தின் நோக்கம். இந்த வரைவு ஒப்பந்தம், இரு நாடுகளிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் முதலீடுகள், சர்வதேச சூரிய ஒளி மின் சக்திக் கூட்டணியில் இணைந்து பணியாற்றுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு நல்குதல், அறிவு பகிர்தலின் மூலமாக மனிதவளத்தை அதிகரித்தல், முதலீட்டுக்காக கூட்டு நிதியத்தை உருவாக்குதல், இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் இதர வழிகளில் ஒத்துழைப்பு நல்குதல் ஆகியவற்றுக்கு இந்த வரைவு ஒப்பந்தம் வகை செய்யும்.