Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனேயில் நவீன நகரங்கள் மற்றும் அம்ரூத் திட்டங்களின் முதலாம் ஆண்டு நிறைவு விழா – பிரதமர் பங்கேற்பு

புனேயில் நவீன நகரங்கள் மற்றும் அம்ரூத் திட்டங்களின் முதலாம் ஆண்டு நிறைவு விழா – பிரதமர் பங்கேற்பு


புனேயில் நடைபெற்ற நவீன நகரங்கள் மற்றும் அம்ரூத் (நகர புத்துயிர்ப்பு மற்றும் மாற்றத்திற்கான அடல் இயக்கம்) திட்டங்களின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அனைத்து நகரங்களும் வளர்ச்சி பாதையில் முன்னேற போட்டி போட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார். ஜன் பாகிதாரி (மக்கள் பங்கேற்பு) என்ற உணர்வில், வளர்ச்சி பாதையை நோக்கி நல்ல முறையில் போட்டி போட்டு வருகின்றன. நகரங்களில் வாழும் மக்களே தங்களின் நகர வளர்ச்சி குறித்து முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பான முடிவுகள் தில்லியில் எடுக்க முடியாது. பங்கேற்பு ஆட்சி உணர்வு இதற்கு மிகவும் அவசியமாகும் என்றும் பிரதமர் கூறினார்.

நகரமையமாக்குதலை பிரச்சினையாக கருதும் நாட்கள் முடிந்துவிட்டன. இப்பொழுது அது வாய்ப்பாகவே கருதப்படுகின்றது என்றும் பிரதமர் கூறினார்.

நகரங்கள் வளர்ச்சி மையங்களாகத் திகழ்கின்றன. மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை குறைக்கும் ஆற்றல் பெற்றவை என்று பிரதமர் கூறினார்.

திடக் கழிவுகள் மேலான்மையில் நகரங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

விசாகப்பட்டினம், புவனேஸ்வர், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இருந்து ஆந்திர பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் காணொளி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தங்களின் எண்ணங்களை அவர்கள் நிகழ்ச்சியில் கூடிருந்தோருடன் பகிர்ந்துக் கொண்டனர். நவீன இணைய தளம், புனேவின் நவீன நகரங்கள் திட்டம் மற்றும் ‘உங்களின் நகரத்தை நவீன நகரமாக மாற்றுங்கள்’ போட்டியையும் பிரதமர் இந்நிகழ்ச்சியின் போது துவக்கி வைத்தார்.