Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெங்களூர் சிட்டி-நான்டெட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் இரங்கல்


ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் மாவட்டம் அருகே ஏற்பட்ட பெங்களூர் சிட்டி-நான்டெட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் சிட்டி-நான்டெட் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது துரதிருஷ்டவசமானது. விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் திரு. வெங்கடேஷ் நாயக் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாயத்திற்கு அவரது சேவைகளை அனைவரும் நினைவு கூர்வார்கள் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.