Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கொள்முதலில் முன்னுரிமை (உள்ளூர் இடுபொருட்களுடன் இணைத்து) அளிக்கும் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கொள்முதல் முன்னுரிமை (உள்ளூர் பொருட்களுடன் இணைத்து) அளிக்கும் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தக் கொள்கை, 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். கொள்கையின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்காக மேற்பார்வைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு செயல்பாட்டை மேற்பார்வையிடுவதுடன், வருடாந்திர மறுஆய்வுசெய்து, கொள்கையை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிப்பதற்கான பரிந்துரையை வழங்கும்.

இந்தக் கொள்கையின் கீழ், சில எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக உடன்படிக்கைகளுக்கு உள்ளூர் இடுபொருட்கள் (Local Content –LC) இலக்கு ஒழுங்குபடுத்தப்படும். உள்ளூர் இடுபொருட்கள் இலக்கை எட்டும் உற்பத்தியாளர்கள்/சேவை வழங்குவோர் மற்றும் அவர்கள் குறிப்பிடும் தொகை, குறைந்தபட்ச உரிய விலையில் 10 சதவீதத்துக்குள் இருக்கும்போது, அவர்களுக்கு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். அந்த நிறுவனங்களிடமிருந்து அந்த விலைக்கு இணையாக, குறிப்பிட்ட பகுதி கொள்முதல் செய்யப்படும்.

இந்தக் கொள்கையானது, விநியோகஸ்தர்களையும், சேவை வழங்குவோரையும் இந்தியாவில் தயாரிப்போம் வழிமுறையை பின்பற்ற ஊக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு நாட்டுக்குள்ளேயே மதிப்பைக் கூட்டும்.

அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், அதன் முழு கட்டுப்பாட்டில் உள்ள துணை நிறுவனங்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து 51 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளைக் கொண்ட கூட்டு நிறுவனங்கள், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் துணை அலுவலகங்கள் மற்றும் இணைக்கப்பட்ட அலுவலகங்களுக்கும் இந்த கொள்கை பொருந்தும்.

பின்னணி:

இந்தியாவில் தயாரிப்போம் பிரச்சாரத்தை 2014-ம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். நாட்டை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியாவை சர்வதேச அளவிலான வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதே இதன் நோக்கம். இந்தப் பிரச்சாரத்தின் அடிப்படையில், சரக்கு மற்றும் சேவையில் உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்க அரசு முடிவுசெய்துள்ளது. இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை செயல்படுத்தும்போது, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக நடவடிக்கைகளில் உள்ளூர் இடுபொருட்கள் இலக்கை எட்டும் உற்பத்தியாளர்கள்/சேவை வழங்குவோருக்கு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கும் வகையில் கொள்கை பின்பற்றப்படும்.

****