Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போடோலாந்து் பிராந்திய கவுன்சிலின் தலைமை நிர்வாக உறுப்பினராக பதவியேற்ற திரு. ஹக்ராமா மொஹிலாரிக்கு பிரதமர் வாழ்த்து


போடோலாந்து் பிராந்திய கவுன்சிலின் தலைமை நிர்வாக உறுப்பினராக பதவியேற்ற திரு. ஹக்ராமா மொஹிலாரிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

போடோ பிராந்திய கவுன்சில் நிர்வாகத்திற்கு மத்திய அரசு மற்றும் அஸ்ஸாம் அரசு ஆகிய இரண்டும் உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் திரு. மோடி மீண்டும் கூறியுள்ளார்.

இதுகுறித்து X வலைதளத்தில், திரு. மோடி வெளியிட்டுள்ள பதிவில், “போடோலாந்து் பிராந்திய கவுன்சிலின் தலைமை நிர்வாக உறுப்பினராக பதவியேற்ற திரு. ஹக்ராமா மொஹிலாரிக்கு வாழ்த்துக்கள். அவருக்கும் அவரது குழுவிற்கும் அவர்களின் பதவிக்காலத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள். மகத்தான போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றவும், அனைத்துத் துறை வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் நாம் அனைவரும் கூட்டாக செயல்படுவோம். மத்திய அரசும் அஸ்ஸாம் அரசும் போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் நிர்வாகத்தை தொடர்ந்து ஆதரிக்கும் என்று அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 2175008)

AD/VK/RJ