பி.எம்.இந்தியா
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேச தந்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை ஜார்கண்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜார்கண்ட்டில் கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 180 கி.வாட் சூரிய சக்தி மேற்கூரையை பிரதமர் திறந்து வைக்கிறார். அதன் பிறகு தும்காவில் பிரதமர் முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் பெரிய அளவிலான கடனுதவி முகாமையும் துவக்கி வைக்கிறார்.
இந்தியா டுடே நிறுவனம் புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ள சஃபைகிரி விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் நாளை மாலை பங்கேற்க உள்ளார்.