பி.எம்.இந்தியா
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, குடியுரிமை சரிபார்த்தல் தேவைப்படும் நாடுகளில் வேலைவாய்ப்பிற்காக செல்லும் குடியுரிமை சரிபார்த்தல் தேவைப்படும் (இ.சி.ஆர்.)-பிரிவினர் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி வெளிநாடு வாழ் பாதுகாப்புத் திட்டத்தை கைவிட ஒப்புதல் அளித்தது.
மகாத்மா காந்தி வெளிநாடு வாழ் பாதுகாப்புத் திட்டத்திற்கான சந்தா தொகை மிகக் குறைவு மற்றும் கடந்த ஒரு வருட காலமாக எந்த புதிய சந்தா தொகையும் பெறப்படவில்லை. ஆகையால், திட்டத்தை கைவிடுவதன் மூலம், தவிர்க்கக்கூடிய நிர்வாக தொடர் செலவினம் மற்றும் ஆவண-பாதுகாப்பு செலவினங்களை அகற்றலாம்.