Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள திருமதி சுனேத்ரா பவாருக்குப் பிரதமர் வாழ்த்து


மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள திருமதி சுனேத்ரா பவாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தப் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் ஆவார். “மாநில மக்களின் நலனுக்காக அவர் அயராது பாடுபடுவார் என்றும், மறைந்த அஜித் பவாரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவார் என்றும் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்று திரு. மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவியேற்கும், திருமதி சுனேத்ரா பவாருக்குப் எனது நல்வாழ்த்துகள். இந்தப் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் என்பதுடன், அம்மாநில மக்களின் நலனுக்காக அவர் அயராது பாடுபடுவார் என்றும், மறைந்த அஜித் பவாரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221265&reg=3&lang=1

***

TV/SV/RK