Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய தகவல் ஆணையத்தின் பத்தாவது மாநாடு – பிரதமர் அறிக்கை

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சாதாரண மனிதர் தனக்கு வேண்டிய தகவலை மட்டும் அறிந்து கொள்வதின்றி பொறுப்பில் இருப்பவர்களை கேள்வி கேட்பதற்கான உரிமையையும் அளிக்கும் ஒரு கருவியாக உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மத்திய தகவல் ஆணையத்தின் பத்தாவது மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் இந்நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது:

மத்திய அரசின் “டிஜிட்டல் இந்தியா திட்டம்” தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உதவும் வகையில் உள்ளது ஏனென்றால் இத்திட்டம் இணையதளத்தில் தகவலை வெளியிடுவதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி நம்பிக்கையையும் வளர்க்கிறது.

நிலக்கரிச் சுரங்கம், ஸ்பெக்ட்ரம் மற்றும் அலைவரிசை பண்பலை (எப்எம்) வானொலி உரிம ஏலம் குறித்து பேசிய பிரதமர், மக்களுக்கு தகவல் முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். நிர்வாக செயல்பாடுகள் மக்களின் நம்பிக்கையை பொருத்தே இருக்க வேண்டுமே தவிர மக்களை ஒரு போது சந்தேகிக்கக் கூடாது.

சிறந்த அரசாட்சிக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் முக்கிய கருவியாக உள்ளது. திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க பிரதமர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்ட பிரகதி முக்கிய தளமாக அமைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

••••