பி.எம்.இந்தியா
மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஜி வழங்கிய வாழ்த்துகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து பிரதமர் தனது சமூக வலைதளப் பதிவில், “உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி ஹரிவன்ஷ் ஜி. இந்த தருணம், தேசத்திற்காக இன்னும் அதிக அர்ப்பணிப்புடனும், உண்மையான விசுவாசத்துடனும், உறுதிப்பாட்டுடனும் பணியாற்ற எனக்கு ஊக்கமளிக்கிறது. அனைவருடனும் இணைந்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற மந்திரத்துடன், இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தத் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271392®=48&lang=1
***
TV/VK/RJ
शुभकामनाओं के लिए आपका हृदय से आभार माननीय हरिवंश जी। यह अवसर देश के लिए और अधिक समर्पण, निष्ठा एवं प्रतिबद्धता के साथ कार्य करने की प्रेरणा देता है। 'सबका साथ, सबका विकास' के मंत्र के साथ हम भारतवर्ष के चौतरफा विकास के लिए प्रतिबद्ध हैं।@harivansh1956 https://t.co/LJLQfLZ08Q
— Narendra Modi (@narendramodi) June 10, 2026