Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாற்றியமைத்து உருவாக்கப்பட்ட மின்சார பேருந்து செயல் விளக்க நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கென மாற்றி யமைக்கப்பட்ட மின்சார பேருந்தை இயக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். டீசல் பேருந்து ஒன்றினை மாற்றியமைத்து மின்கலத்தில் இயக்கப்படும் மின்சார பேருந்தாக இப்பேருந்து மாற்றி அமைக்கப்பட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்காக சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த முயற்சியை மேற்கொண்டது.

பேருந்தினுள் சென்று அதனை பார்வையிட்ட பிரதமர் மோடி அதன் சாவியை மக்களவை தலைவர் திருமதி சுமத்திரா மகாஜனிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சுற்றுச்சூழல் பற்றி நெடுங்காலமாக விவாதித்து வருகிறோம்; ஆனால் சமீபத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்பட்ட தாக்கத்தை சாதாரண மனிதனும் உணர தலைப்பட்டுள்ளனர் என்றார்.

பாரீசில் சமீபத்தில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு-21ல் (CoP-21) பற்றி குறிப்பிட்ட பிரதமர் அதில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கிய நடவடிக்கைகள் பற்றி பேசினார். ஒன்று இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் கூட்டாக தொடக்கிய ‘புதுமை படைத்தல் இயக்கம்’ ஆகும். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கம் பசுமை தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உழைக்கும். இரண்டாவது அபரிமிதமான சூரியஒளி வரம் பெற்றுள்ள நாடுகளின் சர்வதேச சூரியசக்தி கூட்டணி என்ற அமைப்பு உருவாக்கம். இந்தக் கூட்டணியின் தலைமையிடம் டெல்லியில் அமைந்திருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்த மின்சார பேருந்து இயக்கப்பட்டதில் மத்திய சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரியின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். இந்தியாவில் விலை குறைவான திறன் மிக்க பாட்டரிகளை உற்பத்தி செய்வதற்கு தொழில் முனைவோர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் அப்போதுதான் தூய்மையான பொது போக்குவரத்து வசதிகள் உருவாகும் என்றார்.

மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகஜன், மத்திய அமைச்சர்கள் திரு. வெங்கையா நாயுடு, திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

***