பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.08.2026), முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார். அபாரமான தொலைநோக்குப் பார்வையுடன் தமது வாழ்நாளை நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவர் வாஜ்பாய் என்று பிரதமர் கூறியுள்ளார்.
அடல் பிஹாரி வாஜ்பாயின் வார்த்தைகளும் செயல்களும் பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்ததாகவும், அவரது தலைமை நமது நாட்டை வலுப்படுத்தியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி, பொது நலன் ஆகியவை மீதான அடல் பிஹாரி வாஜ்பாயின் நோக்கம் எப்போதும் நமக்கு வழிகாட்டியாகத் தொடரும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறோம். அபாரமான தொலைநோக்குப் பார்வை கொண்ட மாபெரும் தலைவரான அவர், தமது வாழ்நாளை நமது நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்தார். அவரது வார்த்தைகளும் முயற்சிகளும் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கின்றன. அவரது தலைமை நமது நாட்டை வலுப்படுத்தியது. நல்லாட்சி, பொது நலன் ஆகியவை மீதான அவரது நோக்கம் என்றும் நமக்கு வழிகாட்டும்.”
***
(Release ID: 2300084)
SS/PLM/RJ
Remembering Atal Ji on his Punya Tithi. An extraordinary statesman blessed with remarkable vision, he dedicated his life to the service of our nation. His words and efforts inspired generations and his leadership strengthened our nation. His focus on good governance and public…
— Narendra Modi (@narendramodi) August 16, 2026