Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்ஷி பிரேம்சந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்


புகழ்பெற்ற இலக்கியவாதியான முன்ஷி பிரேம்சந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

முன்ஷி பிரேம்சந்த் தது காலத்தால் அழியாத இலக்கியப் படைப்புகள் மூலம் மனித உணர்வுகள் தொடர்பாக சக்திவாய்ந்த கருத்துகளை வழங்கினார் என்றும், அது இன்றும் பொருத்தமானதாகத் தொடர்கிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார். மேலும், து பிறப்பிடமான காசியின் இலக்கியப் பாரம்பரியத்தை உலக அங்கீகாரத்திற்குக் கொண்டு வந்ததில் அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பையும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

யதார்த்தம், சமூக சமத்துவம் ஆகியவற்றில் வேரூன்றிய முன்ஷி பிரேம்சந்தின் இலக்கியம், நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292303&reg=3&lang=1

***

SS/PLM/RJ/SH