Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மைகவ் தளத்தின் 10 ஆண்டுகள்: பிரதமர் பாராட்டு


மைகவ் தளம் பங்கேற்பிற்கும், நல்லாட்சிக்கும் துடிப்புமிக்க அமைப்பு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மதிப்புமிக்க கருத்துகள், உள்ளீடுகள் மூலம் மைகவ் தளத்தை  வளப்படுத்திய அனைவரையும் திரு மோடி பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

இன்று நாம் மைகவ் தளத்தின் 10-வது ஆண்டினை #10YearsOfMyGov கொண்டாடுகிறோம். இந்தத் தளத்தை வளப்படுத்த, தங்களின் மதிப்புமிக்க  கருத்துகளையும், உள்ளீடுகளையும் பகிர்ந்து கொண்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன். கடந்த பத்தாண்டுகளில், பங்கேற்புக்கும், நல்லாட்சிக்கும் துடிப்புமிக்க தளமாக மைகவ் இருந்துள்ளது.”

***

SMB/AG/DL