பி.எம்.இந்தியா
மாண்புமிகு அதிபர் ஃபிலிப் நியூசி, ஊடக நண்பர்களே, உங்களது அன்பான வார்த்தைகளுக்கு எனது நன்றிகள்.
இந்தியா மற்றும் நமது இரு நாட்டு உறவுகள் தொடர்பான உங்களது உணர்வுகளை நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதிபர் நியூசி அவர்களே, கடந்த ஆண்டு ஆசியாவில் நீங்கள் முதலாவதாக இந்தியா வந்தீர்கள். இன்று எனது ஆப்பிரிக்க பயணத்தில் முதலாவதாக நான் மொசாம்பிக் வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
காலனி ஆதிக்கத்தில் நசுக்கப்பட்டதன் காரணமாக நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட போராட்டங்கள் மற்றும் துன்பங்கள் நமது இரு நாடுகளையும் ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது. மொசாம்பிக் சுதந்திரம் பெறுவதற்காக வலிமைமிக்க ஆதரவு அளித்த நாடுகளில் இந்தியா ஒன்றாகும். ஆனால் அது பழைய வரலாற்றைப் பற்றியது மட்டுமன்று. வரும் ஆண்டுகளில் வலிமையான கூட்டணிக்கான பகிர்ந்து கொள்ளப்பட்ட நமது கண்ணோட்டம் தொடர்பாக அதிபரும் நானும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம். ஆப்ரிக்காவில் இந்திய முதலீடுகளுக்கான நுழைவு வாயிலாக ஏற்கெனவே மொசாம்பிக் திகழ்கிறது. ஆப்ரிக்காவில் செய்யப்பட்டுள்ள இந்திய முதலீடுகளில் நான்கில் ஒரு பகுதி மொசாம்பிக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் நமது உறவுகள் வளர்ச்சியைக் கண்டுள்ளன. அதிபர் நியூசியின் தலைமையின் கீழ், இந்திய முதலீடுகள் தொடர்ந்து வளம் பெறுவதற்கான சூழ்நிலையைப் பெறும் என நாங்கள் நம்புகிறோம்.
நமது கூட்டணி திறன்கள் மற்றும் ஆர்வங்கள் ஆகியவற்றின் இணைப்பால் இயக்கப்பட்டு வருகிறது.
அது வேளாண்மை அல்லது சுகாதாரம், அல்லது எரிசக்தி பாதுகாப்பு
இயற்கை ஆதாரங்கள் அல்லது தொழில்நுட்பம்
திறன் மேம்பாடு அல்லது நிறுவனங்கள் உருவாக்குதல்
பாதுகாப்பு அல்லது ராணுவம் என எதுவாக இருந்தாலும் சரி.
மொசாம்பிக் வலுவான நிலையில் உள்ள துறைகள் இந்தியாவின் தேவைகளாக உள்ளன. மொசாம்பிக்கிற்கு எது தேவைப்படுகிறதோ அது இந்தியாவில் உள்ளது. நாங்கள் அற்றைப் பகிர்ந்து கொள்வோம். வேளாண் வளர்ச்சி தான் தனது முக்கிய முன்னுரிமை என்று அதிபர் நியூசி கூறியுள்ளார். மொசாம்பிக்கில் வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும், உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து எங்களது நிபுணர்கள் ஆலோசனைகளை நடத்தியுள்ளனர். இந்த ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதற்கு நாங்கள் இன்று ஒப்புக் கொண்டிருக்கிறோம். உணவுப் பாதுகாப்பிலும் நாங்கள் எங்களது ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மொசாம்பிக்கிடம் இருந்து பருப்பு வகைகளை வாங்க இந்தியா உறுதிபூண்டிருப்பது இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவும். வர்த்தக ரீதியான வேளாண்மையில் நீண்ட கால முதலீடுகள், பண்ணை வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இந்த நாட்டின் பண்ணை வருவாய்களை அதிகரிக்கவும் இது உதவும். இந்தியாவின் திறன்கள் மற்றும் மொசாம்பிக்கின் தேவைகள் கொண்ட இன்னொரு துறை சுகாதாரமாகும். எய்ட்ஸ் சிகிச்சைக்கான மருந்துகள் உட்பட மொசாம்பிக்கின் பொது மருத்துவ முறைக்கு அத்தியாவசியமான மருந்துகளை இந்தியா நன்கொடையாக அளிக்கும்.
நண்பர்களே,
மொசாம்பிக்கின் சுமார் 20,000 குடிமக்கள் தங்களது மூதாதையர்களை இந்தியாவில் காணலாம். அவர்கள் நமது பொருளாதார மற்றும் நமது சமூகங்களுக்கான பாலமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஒத்துழைப்புக்காக பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை செய்து கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் படித்த மொசாம்பிக் நாட்டின் இளைஞர்களுடன் இன்று மாலையில் நான் கலந்துயாடுகிறேன்.
நண்பர்களே,
நமது வளர்ச்சி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நமது சமூகங்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என நான் விருப்புகிறேன். எங்களது கூட்டணி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். பயங்கரவாதம் இன்று உலகம் சந்திக்கும் மிக மோசமான பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை அதிபர் நியூசியும் நானும் அங்கீகரிக்கிறோம். இந்தியவும் மொசாம்பிக்கும் இதற்கு விலக்கு அல்ல. பயங்கரவாதம் இந்தியாவையும் மொசாம்பிக்கையும் சம அளவில் பாதிக்கிறது. பயங்காரவாதம் உலகின் இதர பன்னாட்டு குற்றங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. போதை மருந்து கடத்தலை தடுக்க எங்களது உடன்படிக்கை, இந்தக் கட்டமைப்புக்களை எதிர்த்துப் போராட உங்களது பகிர்ந்து கொள்ளப்பட்ட உறுதியின் எடுத்துக்காட்டாகும். இந்தியாவையும் மொசாம்பிக்கையும் இந்தியப் பெருங்கடல் இணைக்கிறது. இது பொருளாதார வாய்ப்புகள் நிறைந்த கடலாகும். ஆனால் நாங்கள் கடல்சார் துறையில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதையும் உணர்ந்திருக்கிறோம். எங்களது பாதுகாப்பு ஆர்வங்கள் அதிக அளவில் பகிரப்படுவதற்காக அதிபரும் நானும் இன்று பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளோம். மொசாம்பிக்கின் பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாங்கள் இணைந்து செயல்படுவோம். திறன்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் பயிற்சி அளித்தல், கருவிகள் அளித்தல் மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.
நண்பர்களே,
எங்களது ஒத்துழைப்பு என்பது எங்களது பொதுவான வளத்திற்காக மட்டுமன்று. பரந்து பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய நன்மையையும் நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். பல்வேறு விவகாரங்களில் நாங்கள் சர்வதேச அளவில் இணைந்து செயல்பட்டிருக்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடங்கி ஜூன் 21 சர்வதேச யோகா தினம் வரை நாங்கள் இணைந்து நின்றிருக்கிறோம். கடந்த ஆண்டு சிளுபி 21 உச்சி மாநாட்டில் , இந்தியா ஒரு பெரும் முயற்சியை மேற்கொண்டு சூரிய மின் சக்தியை புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஆதாரமாக ஆக முயற்சித்தது. இதற்கு நாங்கள் ஒரு சர்வதேச சூரியமின்சக்தி கூட்டணியை ஏற்படுத்தி பருவ நிலை மாற்றத்திற்காக போராடி வருகிறோம். இந்த கூட்டணிக்கு 120க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்திருப்பதுடன், இந்த முயற்சியில் மொசாம்பிக்குடன் இணைந்து செயல்படுவதற்கு அதிக மதிப்பை அளித்திருக்கிறோம்.
நண்பர்களே,
பொருளாதார வளத்தை நோக்கிய மொசாம்பிக்கின் பயணத்தில் இந்தியா உடன் பயணிக்கும். உங்களது வளர்ச்சியில் நாங்கள் நம்பிக்கை மிகுந்த நண்பராக இருப்போம். மேலும் பிரகாசமான, பாதுகாப்பான எதிர்காலத்தை அளிப்பதற்கான நம்பிக்கையான கூட்டாளியாக இருப்போம். அதிபர் நியூசி, மொபசாமபிக் அரசு மற்றும் மக்களுக்கு அவர்கள் அளித்த இனிய வரவேற்புக்காகவும் உபசரிப்புக்காகவும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. நன்றி. நன்றி.
Our shared struggles and suffering under colonial oppression brought our two countries together: PM on India-Mozambique ties
— PMO India (@PMOIndia) July 7, 2016
India was one of the strongest supporters of Mozambican independence: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 7, 2016
Mozambique has already been one of the gateways for Indian investments into Africa: PM @narendramodi at the joint press meet
— PMO India (@PMOIndia) July 7, 2016
Our partnership is also driven by a convergence of capacities and interests: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 7, 2016
We agreed to put cooperation in agriculture on the fast track. We are also strengthening our partnership in food security: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 7, 2016
Health care is another area where India's capacities and Mozambican needs match well: PM @narendramodi in Mozambique
— PMO India (@PMOIndia) July 7, 2016
Health care is another area where India's capacities and Mozambican needs match well: PM @narendramodi in Mozambique
— PMO India (@PMOIndia) July 7, 2016
I am particularly happy about our agreement to facilitate youth and sports cooperation and exchanges: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 7, 2016
President Nyusi and I recognize that terrorism is the gravest security threat facing the world today: PM @narendramodi in Mozambique
— PMO India (@PMOIndia) July 7, 2016
President and I have today agreed to strengthen our defence and security relationship: PM @narendramodi at the joint press meet
— PMO India (@PMOIndia) July 7, 2016
In Mozambique's march towards economic prosperity, India will walk every step of the way. We will be a trusted friend: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 7, 2016
President Nyusi & I agreed to increase cooperation in vital areas like agriculture, food security & healthcare. https://t.co/deQYHQIhKI
— Narendra Modi (@narendramodi) July 7, 2016
Both of us agreed that terrorism is the gravest threat facing the world today. We have decided to strengthen defence & security ties.
— Narendra Modi (@narendramodi) July 7, 2016