Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8% வளர்ச்சியை அடைந்ததற்காக நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்து, வளர்ந்து வரும் பொருளாதார நம்பிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார்


நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8% வளர்ச்சியை அடைந்ததற்காக நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்தக் காணொளிச் செய்தியைப் பகிர்ந்துள்ள பிரதமர், வலுவான பொருளாதாரக் குறியீடுகளைச் சுட்டிக்காட்டி, இவை பொருளாதாரத்தின் மீதான வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

“7.8% வளர்ச்சி.

வலுவான குறியீடுகள்.

மேலும் வலுவான நம்பிக்கை.”

***

(Release ID: 2305338)

SS/IR/PS/SH