Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரசாயனப் பூங்காங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்திய ரசாயனத் தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் பவ்யா ரசாயன் என்ற திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இத்திட்டத்தின் கீழ், மூன்று ரசாயனப் பூங்காக்கள் அமைக்கப்படும். இத்திட்டம் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 

3,030 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பவ்யா ரசாயனத் திட்டமானது, மூலப்பொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் ரசாயனத் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும். ரசாயனங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் இந்தத் தொழில்துறை உலகளவில் போட்டித்தன்மை மிக்கதாக மாறும்.

மருந்துப் பொருட்கள், வேளாண்மை, ஊட்டச்சத்து போன்ற பல்வேறு தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களையும், பெட்ரோ ரசாயனங்களையும் பவ்யா ரசாயன் திட்டம் ஊக்குவித்து அவற்றின் உற்பத்தியை மேம்படுத்தும்.

இத்திட்டத்தின்படி, மூன்று பிரத்யேக ரசாயனப் பூங்காக்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவை ஒவ்வொன்றும் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.  இந்தப் பூங்காக்கள் ரசாயனத் தொழிலுக்கான உள்கட்டமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிறந்த நீர் விநியோக அமைப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288863&reg=3&lang=1  

—-

TV/PLM/SU/SP