Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் சிக்கார் மாவட்டத்தில் உள்ள கது ஷியாம்ஜி கோயில் வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


 ராஜஸ்தான்  சிக்கார்  மாவட்டத்தில் உள்ள கது ஷியாம்ஜி கோயில் வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;  “ராஜஸ்தான் சிக்கார் கது ஷியாம்ஜி கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்ட  செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது  இரங்கல்கள்.  இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”  என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***************

(Release ID: 1849601)