பி.எம்.இந்தியா
ராஜஸ்தான் மாநிலத்தில் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி இன்று உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.. இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் திருமதி. வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகரிகள், ராஜஸ்தான் மாநில அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்திற்கு தேசிய பேரிடர் பொறுப்பு நிதியத்தில் (என்.டி.ஆர்.எப்) இருந்து 911 கோடியே 64 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் இருப்பு நிதி கணக்கு நிகர்செய்த பின் எஞ்சிய இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2015-16ம் நிதி ஆண்டில் என்டிஆர்எப் நிதியில் மத்திய அரசின் பங்கான 827 கோடியே 25 லட்சத்துடன் இது கூடுதல் நிதியாகும். இது தவிர மாநில 2016- 17ம் நிதி ஆண்டில் மாநில பேரிடர் பொறுப்புக்குழு நிதியில் முதல் தவணையாக 434 கோடியே 25 லட்சம் வழங்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கடந்த 67 ஆண்டுகளில் 61 ஆண்டுகள் வறட்சியில் இருந்தது என்பதை முதலமைச்சர் வசுந்தரா சுட்டிக்காட்டினார். குடிநீர் பற்றாக்குறையால் மாநிலத்தில் மக்கள் படும் சிரமங்களையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். மாநிலத்தில் முதலமைச்சரின் ஜல் சவுலாம்பன் அபியான் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 7 லட்சம் நீர்சேமிப்புத் திட்டங்களை உருவாக்கி இருப்பது பற்றியும், இதில், 1 லட்சம் நீர்சேமிப்பு திட்டங்கள் ஜூன் 30, 2016க்குள் நடைமுறைப்படுத்தப்பட இருப்பது பற்றியும் பிரதமரிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார்.. ராஜஸ்தான் மாநிலம் குறு பாசனத்திட்டத்திற்கு நர்மதா நதிநீரை பயன்படுத்தி வருகிறது என்றும் கூறினார்.
அப்போது நீர் சேமிப்புத் திட்டங்களை பெரும் மக்கள் திட்டமாக செயல்படுத்த பிரதமர் அறிவுறுத்தினார். என்.சி.சி., என்.எஸ்.எஸ். என்.ஒய்.கே.எஸ். மற்றும் சாரணர், சாரணீய இயக்கங்கள் வாயிலாக நீர் சேமிப்புத் திட்டங்களை நிறைவேற்ற அவர் வலியுறுத்தினார்
கழிவுநீர் மேலாண்மை, மாடிகளில் மழைநீர் சேமிப்புத் திட்டங்களின் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.. சர்வதேச அளவில் இதுபோன்ற நல்லத்திட்டங்களை ஆய்வு செய்யலாம் என்று கூறிய பிரதமர், மக்கள் பங்களிப்புடன் மாநிலத்தில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் பாவடி நீர்சேமிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது பாவடி திட்டம் மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது என்றும், நாகூர் மாவட்டம் குச்சாமன் நகரில் இது புத்துணர்வுடன் தொடங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் எடுத்துக்கூறினார். இதை பெரிய அளவில் பிற இடங்களிலும் செய்வதாக முதல்வர் உறுதி அளித்தார்.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவு நீர் மேலாண்மையில் குறைந்தது ஒரு நகரை மாதிரி நகரமாக மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர் மோடி, அருகில் உள்ள ஊரகப்பகுதிகளின் நீர் திட்டங்களை ஒருங்கிணைத்தல், நகரில் எரிவாயு மூலமான போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மத்திய மாநில ஒருங்கிணைப்புடன் பணிகளை இணைந்து செய்ய வேண்டும் என்ற கருத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
Discussed at length the drought situation in Rajasthan & ways to improve drought & water scarcity during the meeting with CM @VasundharaBJP.
— Narendra Modi (@narendramodi) May 14, 2016
CM @VasundharaBJP briefed me on Mukhyamantri Jal Swavlamban Abhiyan & micro irrigation initiatives of State Govt. https://t.co/ZCVvqvbznq
— Narendra Modi (@narendramodi) May 14, 2016
In our meeting @VasundharaBJP ji shared an example of Bavdi revival in Nagore dist & said that State Govt will take it up on larger scale.
— Narendra Modi (@narendramodi) May 14, 2016