பி.எம்.இந்தியா
ராஞ்சியில் தன்வசம் உள்ள பயன்படுத்தப்படாத 675.43 ஏக்கர் நிலத்தை கனரக பொறியியல் கார்ப்பரேசன் (HEC) லிமிடெட் நிறுவனம் ஜார்க்கண்ட் அரசுக்கு மாற்றுவதன் மூலம் பணமாக்கிக் கொள்வதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது எச்.இ.சி. நிறுவனத்திற்கு ரூ.742.98 கோடி நிதி திரட்டுவதற்கு உதவும். தொழிலாளர்கள் தொடர்பான சட்டபூர்வ நிலுவைகளை – அதாவது பணிக்கொடை, வைப்பு நிதி, விடுப்பை பணமாக்குதல் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பிற ஓய்வுக்கால பயன்கள் போன்றவற்றை – வழங்குவதற்கான தேவைக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அரசுக்கான நிலுவைகள், வங்கியாளர்களுக்கான நிலுவைகளயும், இதர கடன்களையும் செலுத்துவதற்கு எச்.இ.சி. நிறுவனத்திற்கு இந்த நிதி உதவியாக இருக்கும்.
ஜார்க்கண்ட் அரசுக்கு தனது ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும், மாநில தலைநகரில் பொதுமக்களின் நலன்களுக்கான பிற வளர்ச்சித் திட்டங்களுக்கும் இந்த நிலம் மாற்றம் உதவியாக இருக்கும்.