பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கவுள்ள தடகள வீரர்களை சந்திப்பார்.
திங்கள் அன்று புதுதில்லி மானெக்ஷா மையத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள குழுவினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் சந்திப்பார். இதுவரை ரியோ ஒலிம்பிக்சின் பல்வேறு போட்டிப் பிரிவுகளில் பங்கேற்க சுமார் 100 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் இந்த விளையாட்டு வீரர்களை சாதாரண முறையில் சந்தித்து, உலகில் மிகப்பெரும் விளையாட்டுப் போட்டியில் சிறப்பாகப் பங்கேற்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பார்.