Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லாக்ஹீடு மார்ட்டினின் ‘இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்காக தயாரிப்போம்’ என்ற உறுதிப்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு


ராணுவத் தளவாட தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனமான லாக்ஹீடு மார்ட்டினின் இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்காக தயாரிப்போம்என்ற உறுதிப்பாட்டிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

லாக்ஹீடு மார்ட்டின் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிம் டெய்க்லட், பிரதமர் திரு நரேந்திர மோடியை வியாழனன்று சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“@LockheedMartin  நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிம் டெய்க்லட், பிரதமர் @narendramodi –யை சந்தித்தார். இந்தியா, அமெரிக்கா விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் சார்ந்த ஒத்துழைப்பில் லாக்ஹீடு மார்ட்டின் முக்கிய பங்குதாரராக  உள்ளது.இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்காக தயாரிப்போம்என்ற தொலைநோக்கை நனவாக்குவதற்கான அந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்”

***

(Release ID: 2034224)

MM/AG/RR