பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, புவிஈர்ப்பு அலைகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடிய திட்டமான லிகோ இந்தியா அறிவியில் திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. லிகோ இந்தியா ஆராய்ச்சித் திட்டம் என்று அழைக்கப்படும் இத்திட்டத்தை மத்திய அணுசக்தித் துறை மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகங்கள் முன்னெடுத்துள்ளன. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க புவி ஈர்ப்பு அலைகள் இத்துறையில் புதிய ஆராய்ச்சிக்கும், பல்வேறு மர்மங்களை கண்டுபிடிப்பதற்கும் உதவும்.
லிகோ இந்தியா திட்டம், உலகத் தரம் வாய்ந்த புவி ஈர்ப்பு அலைகள் ஆய்வகத்தை லிகோ ஆய்வகம் மற்றும், அமெரிக்காவின் எம்.ஐ.டி. ஆகியவை இணைந்து உருவாக்கும். விஞ்ஞானிகளுக்கு புவி ஈர்ப்பு அலைகள் தொடர்பாக பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இத்துறையில் முன்னோடியாக இந்தியா உருவாக இத்திட்டம் உதவும்.
தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் லிகோ இந்தியா திட்டம், எட்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர் அழுத்த வெற்றிட ஒளி பாய்ச்சியை கட்டுவதற்கும், இத்துறையில் இந்தியா பெரும் முன்னேற்றத்தை அடைவதற்கும் உதவும்.
இந்திய மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இத்துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட இத்திட்டம் பெரும் ஊக்கமாக அமையும்.
Cabinet has granted ‘in-principle’ approval to the LIGO-India mega science proposal for research on gravitational waves.
— PMO India (@PMOIndia) February 17, 2016
The approval coincides with the historic detection of gravitational waves a few days ago.
— PMO India (@PMOIndia) February 17, 2016
LIGO-India project will establish a state-of-the-art gravitational wave observatory in collaboration with LIGO Laboratory run by Caltech&MIT
— PMO India (@PMOIndia) February 17, 2016
Project will bring opportunities to dig deeper into realm of gravitational wave & take global leadership in this new astronomical frontier.
— PMO India (@PMOIndia) February 17, 2016
LIGO-India will also bring considerable opportunities in cutting edge technology for the Indian industry.
— PMO India (@PMOIndia) February 17, 2016
The project will motivate Indian students & scientists to explore newer frontiers of knowledge & will add impetus to scientific research.
— PMO India (@PMOIndia) February 17, 2016