Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லோக்பால் மற்றும் லோக் அயுக்தாக்கள் (திருத்தம்) மசோதா, 2016


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை, சட்டப்பிரிவு 44-க்கான திருத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து லோக்பால் மற்றும் லோக் அயுக்தாக்கள் சட்டம், 2013-ல் ஏற்படும் மாற்றங்களை, நாடாளுமன்றத்தில் லோக்பால் மற்றும் லோக் அயுக்தாக்கள் (திருத்தம்) மசோதா, அறிமுகப்படுத்தியதற்கான தனது பின்னேற்பு ஒப்புதலை அளித்தது.

இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட திருத்தங்கள் பல்வேறு தரப்பட்ட அரசு பணியாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தீர்வு அளிப்பதோடு லோக்பால் மற்றும் லோக் அயுக்தாக்கள் சட்டம், 2013 சட்டப்பிரிவு 44-ஐ செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும். நிலைக்குழுவின் பரிந்தரைகளின்படி இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.