பி.எம்.இந்தியா
லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் கட்டுமானப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆய்வு செய்தார். “பணிகள் நிறைவடைந்ததும், இந்த வளாகம் உலகின் மிகப்பெரிய கடல்சார் அருங்காட்சியமாக விளங்கும். சுற்றுலா, ஆராய்ச்சி, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மையமாக விளங்குவதுடன், இந்தியாவின் பழங்கால கடல்சார் பாரம்பரியங்களையும் இது காட்சிப்படுத்தும்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியதாவது:
“லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தேன். பணிகள் நிறைவடைந்ததும், இந்த வளாகம் உலகின் மிகப்பெரிய கடல்சார் அருங்காட்சியமாக விளங்கும். சுற்றுலா, ஆராய்ச்சி, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மையமாக விளங்குவதுடன், இந்தியாவின் பழங்கால கடல்சார் பாரம்பரியங்களையும் இது காட்சிப்படுத்தும்.”
***
(Release ID: 2169086)
AD/RB/RJ
Reviewed the progress of the National Maritime Heritage Complex at Lothal. Once completed, it will be the world's largest maritime museum. It will showcase India's ancient maritime traditions while serving as a hub for tourism, research, education and skill development. pic.twitter.com/D3YWxkegNJ
— Narendra Modi (@narendramodi) September 20, 2025