பி.எம்.இந்தியா
வரி வசூல் தொடர்பான உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவுக்கும் புருனே டாருசலாமுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
விவரங்கள்:
வரி விஷயங்கள் தொடர்பாக இந்தியாவுக்கும் , புருனேவுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுவதை இந்த ஒப்பந்தம் விரிவுப்படுத்தும். இதனால் வரி ஏய்ப்பு மற்றும் வரித்தவிர்ப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படும். இருநாடுகளுக்கும் இடையே வரி வருவாய் கோரிக்கைகள் தொடர்பான வசூலுக்கும் இந்த ஒப்பந்தம் உதவும்.
இந்த ஒப்பந்தம் சார்பாக எவ்வித நிதிச்செலவீனமும் இல்லை. ஒப்பந்தத்தின் 9-வது பிரிவின்படி அசாதாரணமான செலவினங்கள் 500 அமெரிக்க டாலர்-ஐத் தாண்டும் நிலையில் அதனை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இதர வரித்தகவல் பரிவர்த்தனை உடன்பாடுகளில் இந்தியா இத்தகைய பிரிவை கொண்டுள்ளது.
பின்னணி:
1961 ஆம் ஆண்டின் வருமான வரிச்சட்டத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய வருமான வரியை ஏய்ப்பது அல்லது தவிர்ப்பதை தடுப்பதற்கான தகவல் பரிமாற்றத்தை குறிப்பிட்ட நாட்டுடனோ அல்லது பகுதியுடனோ செய்து கொள்வதற்கு அந்தச் சட்டத்தின் 90-வது பிரிவின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வரிகள் தொடர்பான தகவல் பரிமாற்ற உடன்பாடு பற்றிய பேச்சவார்த்தைகள் புருனேயில் 2017 ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இந்திய அரசுக்கும், புருனே டாருசலாமுக்கும் இடையே இந்த ஒப்பந்த வாசகம் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
——-