பி.எம்.இந்தியா
மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உயர்நிலைக் குழு கூட்டடம் நடத்தினார். மகாராஷ்டிரா முதல்வர் திரு.தேவேந்திர பட்னவிஸ் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசின் உயரதிகாரிகள் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், என்.ஜி.ஓ.க்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும் என்று கூட்டத்தை தொடங்கிவைத்து பிரதமர் கூறினார். மேலும் வறட்சியை தடுக்க, நடுத்தர மற்றும் நீண்டக்கால தீர்வுகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சொட்டு நீர் பாசனம், நீர்தெளிப்பு முறை போன்றவற்றின் மூலம் நீர் பயன்பாட்டு மேலாண்மையை அதிகரிக்க வேண்டியது முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார். கரும்பு சாகுபடியில், சொட்டு நீர பாசனம் என்பது, சர்க்கரையின் தரத்தை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் வரும் மூன்று ஆண்டில், கரும்புகள் விளைவிக்கப்படும் அனைத்து பகுதிகளிலும், 100 சதவீதம் அளவுக்கு சொட்டுநீர் பாசனத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருகிறது என்று அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.
பாரம்பரிய மற்றும் நவீன நீர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்றும், அதேபோன்று சேமிப்பு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். சத்ரபதி சிவாஜி பின்பற்றிய ஏராளமான நீர் மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் முறைகளை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். முதல்வர் கூறுகையில், அவரது ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்ட முறைகளை பின்பற்றி நீர்நிலைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் நடவடிக்கைகளை மாநிலம் மேற்கொண்டுள்ளதாக முதல்வர் கூறினார்.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் முன்னேற்பாடுகள் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் முதல்வர் தகவல் தெரிவித்தார்.
நகர்ப்புறங்களில் நீர் மற்றும் திடக் கழிவு மேலாண்மை முறையில் நவீன முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்த பிரதமர், இதன் மூலம் அண்டைப் பகுதிகளுக்கு போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் இயற்கை உரங்கள் கிடைக்கும் என்றார்.
பிரதமரிடம் முதல்வர் கூறுகையில், எல்லா பருவநிலைக்குமான விவசாயத்தில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும், பண்ணை அளவில் இருந்தே தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உலக வங்கி கடனுதவியுடன், பருவநிலை எதிர்ப்பு விவசாய நவீனமயமாக்கல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். உலக வங்கியிடம் விரைவாக இந்த திட்டத்தை பரிந்துரைத்ததற்காக மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் முதல்வர் கூறினார்.
நீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பிற்கான ஜல் யுக்த் ஷிவர் அபியான் திட்டம் குறித்து, பிரதமரிடம், முதல்வர் விளக்கினார். 2016&17 நிதியாண்டில், 51,500 பண்ணை குட்டைகளை அமைக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும், இதற்கு விவசாயிகள் மத்தியில் பெருமளவில் ஆதரவு இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
மராத்வாடா மற்றும் விதர்பா பிராந்தியத்தில், கால நிர்ணய அடிப்படையில் சிக்கலான நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும் முதல்வர் விளக்கினார். மேலும், நிறுவனங்கள் ரீதியிலான கடன் திட்டத்தின் கீழ் பெரும்பாலான விவசாயிகளை கொண்டு வரும் திட்டம் குறித்தும் முதல்வர் பேசினார்.
விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குதல் மற்றும் மகாராஷ்டிராவை வறட்சி இல்லா மாநிலமாக்குதல் குறித்த நடவடிக்கைகள் பற்றியும் முதல்வர் தெரிவித்தார்.
மாநில அரசின் நடவடிக்கைகளை பாராட்டிய பிரதமர், பயிர் மாற்று முறை, மதிப்பீட்டு கூட்டுதல், பால், மீன், பண்ணை, தேனீ வளர்ப்பு உள்ளிட்டவற்றின் மூலம் விவசாயிகளின் வருமான ஆதாரத்தை விரிவு படுத்துதல் ஆகியவை முக்கியம் என்றார். வருவாயை பெருக்க, இயற்கையால் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்கும் திறனும் அவசியம் என்று அவர் கூறினார்.
CM @Dev_Fadnavis & I held wide-ranging discussions on the drought in parts of Maharashtra & how to mitigate it https://t.co/ITJOQ8SAN3
— Narendra Modi (@narendramodi) May 7, 2016
Stressed on vitality of increasing water use efficiency through sprinkler & drip irrigation including in sugarcane cultivation.
— Narendra Modi (@narendramodi) May 7, 2016
Usage of modern solid & liquid waste management practices in urban areas will also benefit the adjoining rural areas.
— Narendra Modi (@narendramodi) May 7, 2016
CM @Dev_Fadnavis apprised me about the Jal Yukt Shivar Abhiyan & State Govt's efforts to complete irrigation projects across the state.
— Narendra Modi (@narendramodi) May 7, 2016