Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜி-யை பிரதமர் சந்தித்தார்

வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜி-யை பிரதமர் சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள வாழும் கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்புக்குச் சென்றபோது, ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜி சந்தித்தார்.

பல்வேறு விஷயங்கள் குறித்தும், குறிப்பாக ஆர்ட் ஆஃப் லிவிங் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருடன் சிறப்பான கலந்துரையாடலை நடத்தியதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சமூக நலனில் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜி கொண்டுள்ள பேரார்வத்தைப் பிரதமர் பாராட்டினார். மேலும், இந்த அமைப்பு பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் சமூகத்திற்கு ஆற்றிவரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

வாழும் கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்பின், ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜியை சந்தித்தேன். நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்தும், குறிப்பாக வாழும் கலை அமைப்பின் பணிகள் குறித்தும் ஒரு அருமையான கலந்துரையாடலை மேற்கொண்டோம். சமூக நலனை மேம்படுத்துவதில் அவருடைய பேரார்வம் குறிப்பிடத்தக்கது.”

***

(Release ID: 2259571)

TV/PLM/RJ