Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விஜயவாடா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்


ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-ன்படி விஜயவாடா விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கை செய்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாநிலத் தலைநகருக்கு தொடர்பு வசதியை மேம்படுத்துவதாக இந்த முன்மொழிவு அமையும். விமான பயணிகளுக்கு போட்டியாளர்களால் குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளிப்பதுடன், உள்நாட்டு / சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிப்பதாகவும், சர்வதேச பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை கொண்டு வருவதன் மூலம் ஆந்திரப்பிரதேசத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இது இருக்கும்.

பின்னணி :

போக்குவரத்து வாய்ப்பு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கை செய்யப் படுகிறது. மேலும், இரவில் விமானங்களை இயக்குவதற்காக தரைப்பரப்பில் ஒளிவிளக்கு வசதிகள் இருத்தல், தரையிறங்கும் சாதன முறைமை, நடுத்தர கொள்திறன் பெரிய வகை விமானம் அல்லது அதற்கு இணையான வகை விமானங்களுக்குத் தேவையான அளவு விமான ஓடுபாதை, சுங்கம், குடியேற்றம், சுகாதாரம் மற்றும் விலங்கு & தாவர தடுப்புக்காப்பு சேவைகளும் சர்வதேச செயல்பாடுகளுக்கு தேவைப்படும்.

ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014-ன் படியும், பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி மற்றும் விமான நிறுவனங்கள் மற்றும் ஆந்திரப்பிரதேச அரசின் கோரிக்கைகளைக் கருத்திக் கொண்டும் விஜயவாடா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. சர்வதேச போக்குவரத்துகளுக்குத் தேவைப்படும் கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

****