பி.எம்.இந்தியா
சமூகங்களை ஒருங்கிணைக்கவும், ஒத்துழைப்புக்கு புதிய பாதைகளை திறக்கவும் விளையாட்டுகள் என்பவை இந்தியா – ஆஸ்திரேலியா இடையே சக்திமிக்க பாலமாக விளங்குகின்றன.
விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு குறித்த 2023-ன் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் நடைமுறை சாத்தியமான, எதிர்கால முன்னுரிமைகளில் கவனம் செலுத்துகின்ற இருதரப்பு நட்புறவை வலுப்படுத்தும் வாய்ப்புகளைக் கொண்டு விளையாட்டுத் துறையில் ஒத்துழைக்க இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
2030-ல் அகமதாபாதில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், 2032-ல் பிரிஸ்பேன் ஒலிம்பிக், பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், எதிர்காலத்தில் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் விருப்பம் உட்பட வரவிருக்கும் 10 ஆண்டுகளுக்கான வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த செயல்திட்டம் பகிரப்பட்ட முன்னுரிமைகள், திறன்கள், ஆதார வளங்கள் ஆகியவற்றுக்கு இணங்க ஒத்துழைப்புக்கான பகுதிகளை அடையாளம் காண்கிறது.
திறன் கட்டமைப்பை பொறுத்தவரை முன்னுரிமை விளையாட்டுகளில் இந்தியாவில் உயர் செயல்பாட்டு விளையாட்டு மையங்களை நிறுவி, செயல்படுத்துவதில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதில் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும்.
யோகா பயிற்சியால் ஏற்படும் உடல், மனநல பயன்களை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு, யோகா தொடர்பான அறிவுப்பகிர்வு, ஒத்துழைப்பை அதிகரித்தல், ஆஸ்திரேலியாவில் யோகா பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை அடையாளம் காணும்.
விளையாட்டு அறிவியல், தொழில்நுட்ப ஆய்வை ஊக்கப்படுத்த இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்களின் செயல்திறன் பகுப்பாய்வு, காயம் ஏற்படுவதை தவிர்த்தல், விளையாட்டுக்கான சத்துணவு, மீட்பு தொழில்நுட்பங்கள், பாரா விளையாட்டு ஆகியவை இந்த ஆய்வில் அடங்கும்.
மிகப்பெரிய நிகழ்வுகளை நடத்துவதற்கு ஆஸ்திரேலிய மாநிலங்கள், பகுதிகள், தேசிய விளையாட்டு அமைப்புகள் ஆகியவற்றுடன் சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்வதற்கான ஒத்துழைப்பு இந்த செயல்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
2026 டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ள பிக் பாஷ் லீக் போட்டி தொடக்கத்தை வரவேற்கும் இந்தத் திட்டம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இந்த வருடாந்திர போட்டியை இந்தியாவில் நடத்த உறுதிபூண்டு செயல்பட்டு வருவதை ஊக்குவிக்கிறது.
விளையாட்டு சாதனங்கள் உற்பத்தி, விளையாட்டு ஊடகம் மற்றும் ஒலிபரப்பு, நிகழ்ச்சி நிர்வாகம், விளையாட்டுகள் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்திய – ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த ஆஸ்திரேலிய நிதியுதவியுடன் டிசம்பர் 2026-ல் மும்பையில் நடைபெறவுள்ள விளையாட்டுத் தொழில்துறை உச்சிமாநாட்டை நோக்கி செயல்படுதல்.
மகளிரின் பொருளாதார பலம், தலைமைத்துவம், ஆரோக்கியம், சமூக உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு வலுவான பாதையாக விளையாட்டு இருப்பதையடுத்து, விளையாட்டு வீராங்கனைகளுக்கு இடையேயான இருதரப்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283122®=3&lang=1
***
SS/SMB/RJ/KR
Sport is a key pillar of the India-Australia partnership, bringing our people closer through shared passion and mutual respect.
— Narendra Modi (@narendramodi) July 10, 2026
Delighted to visit the iconic Melbourne Cricket Ground (MCG) with PM Albanese.
More sporting exchanges, youth engagement and collaboration can… pic.twitter.com/o90MSPIswm
Delighted to witness young sporting talent in action at the MCG. Watching children play cricket, Kabaddi and Australian rules football was a wonderful reminder that sport has a unique ability to connect people.
— Narendra Modi (@narendramodi) July 10, 2026
India and Australia share a deep sporting bond. As both our nations… pic.twitter.com/DRIxJWiCm4