Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெற்றி தினத்தை முன்னிட்டு துணிச்சல் மிக்க வீரர்களுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


1971-ம் ஆண்டு இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உறுதிசெய்த வீரர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் வெற்றி தினத்தன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். அவர்களின்  மன உறுதியும், தன்னலமற்ற சேவையும் நாட்டைப் பாதுகாத்து, இந்திய வரலாற்றில் பெருமை சேர்க்கும் தருணத்தைப் பதிவுசெய்ததாக திரு மோடி கூறியுள்ளார்.

வெற்றி தினம் அவர்களின் வீரத்திற்கு வணக்கம் செலுத்துவதாகவும், அவர்களின் ஒப்பற்ற மனவுணர்வை  நினைவூட்டுவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், வீரர்களின் நாயகத்தன்மை இந்தியர்களின் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் கூறியிருப்பதாவது:

“1971-ம் ஆண்டு இந்தியாவுக்கு வரலாற்றுச்  சிறப்புமிக்க வெற்றியை உறுதிசெய்த வீரர்களின் துணிச்சலையும் தியாகத்தையும்  வெற்றி தினத்தன்று நாம் நினைவுகூர்கிறோம். அவர்களின்  மன உறுதியும், தன்னலமற்ற சேவையும் நாட்டைப் பாதுகாத்து, இந்திய வரலாற்றில் பெருமை சேர்க்கும் தருணத்தைப் பதிவுசெய்தது. இந்த நாள் அவர்களின் வீரத்திற்கு வணக்கம் செலுத்துவதாகவும், அவர்களின் ஒப்பற்ற மனவுணர்வை  நினைவூட்டுவதாகவும் உள்ளது. அவர்களின் நாயகத்தன்மை இந்தியர்களின் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.”

***

(Release ID: 2204386)

SS/SMB/KR