Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெளிநாட்டு முதலீட்டாளருக்கு நிரந்தர குடியிருப்போர் அந்தஸ்து வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கை செய்யும் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளருக்கு நிரந்தர குடியிருப்போர் அந்தஸ்து வழங்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டம் இந்தியாவில் அந்நிய முதலீட்டை ஊக்குவித்து இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும். இத்திட்டத்தின்படி விசா குறிப்பேட்டில் தேவையான பிரிவுகள் சேர்க்கப்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யப்படும்.

நிரந்தரக் குடியிருப்பு அந்தஸ்து 10 ஆண்டுகாலத்துக்கு பலமுறை உள்நுழையும் உரிமையுடன் வழங்கப்படும். இந்த அந்தஸ்தைப் பெற்றிருப்போர் எவ்வித முறைகேட்டுக்கும் ஆளாகாத நிலையில் இந்தப் 10 ஆண்டுகாலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர், அவரது வாழ்க்கைத்துணை, அவரைச் சார்ந்தோருக்குப் பொருந்தும். இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர் குறைந்த பட்சம் ரூ 10 கோடி முதலீட்டை 18 மாத காலத்திற்குள் கொண்டுவர வேண்டும் அல்லது ரூ. 25 கோடி முதலீட்டை 36 மாத காலத்திற்குள் கொண்டுவர வேண்டும். மேலும் இந்த வெளிநாட்டு முதலீடு காரணமாக குறைந்தது 20 இந்தியக் குடிமக்கள் ஒவ்வொரு நிதி ஆண்டும் வேலை வாய்ப்பு பெற வேண்டும்.

தொடக்கமாக 10 ஆண்டு காலத்துக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து பலமுறை உள்நுழைவு வசதியுடன் வழங்கப்படும். இதனை மேலும் 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ள முடியும். இந்த அந்தஸ்து பல முறை உள்வரும் விசாவாக பயன்படும், இவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதும் இருக்காது. மேலும் இந்த அந்தஸ்து பெற்றவர்கள் பல்வேறு பதிவுகளிலிருந்து விலக்க அளிக்கப்படுவார்கள். இந்த அந்தஸ்து பெற்றவர்கள் தாங்கள் தங்கியிருப்பதற்காக ஒரு குடியிருப்பு சொத்திளை வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இந்த அந்தஸ்து பெற்றவரின்“ வாழ்க்கைத்துணை அல்லது அவரைச் சார்ந்திருப்போர் தனியார்துறையில் வேலை செய்யவோ அல்லது படிப்பு மேற்கொள்ளவோ அனுமதிக்கப்படுவார்கள்.