Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து


பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் பாராலிம்பிக் போட்டியின் ஆடவர் வட்டு எறிதல் F56 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கதுனியாவின் உறுதிப்பாடு, கடின உழைப்பு மற்றும் மன உறுதியை திரு மோடி பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“#Paralympics2024 நடைபெற்ற ஆடவர் வட்டு எறிதல் எப்56 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த @YogeshKathuniya-வுக்கு வாழ்த்துகள். உறுதிப்பாடு, கடின உழைப்பு மற்றும் எழுச்சியின் வியத்தகு பயணம் அவருடையது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு #Cheer4Bharat வாழ்த்துக்கள்என்று பதிவிட்டுள்ளார்.

***

(Release ID: 2051035)

MM/AG/KR