பி.எம்.இந்தியா
ஐதராபாதில் இன்று சமத்துவ சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சாதி, சமயம், நம்பிக்கை உள்ளிட்ட வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் சமத்துவ சிந்தனையை மேம்படுத்திய 11-ம் நூற்றாண்டு பக்தி இயக்கத்தின் துறவி ஸ்ரீராமானுஜாசாரியாவின் நினைவாக 216 அடி உயரம் உள்ள சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் திரு ஜி.கிஷண் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் வசந்த பஞ்சமி புனித நாளில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு இத்தகைய நாளில் இந்தச் சிலையை அர்ப்பணித்ததற்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“நாம் ‘அத்வைதத்தை’ பெற்றிருக்கும் அதே வேளையில் ‘த்வைதத்தையும்’ பெற்றிருக்கிறோம். மேலும் ‘த்வைதத்தையும்’, ‘அத்வைதத்தை’யும் இணைக்கும் ஸ்ரீராமானுஜாச்சாரியாவின் ‘விசிஷ்டாத்வைதத்தை’யும் கொண்டுள்ளோம். ஸ்ரீராமானுஜர் ஒரு பக்கம் மதிப்புமிக்க சன்னியாசிகள் பாரம்பரியத்தையும், மறுபக்கம் கீதா பாஸ்ய செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் துறவியாக விளங்கினார். இந்தியாவின் சமுக சீர்திருத்தங்கள், முற்போக்கு அம்சங்கள் ஆகியவை அதன் வேர்களுக்கு அப்பாற்பட்டவை என்று கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீராமானுஜரை நாம் காணும் போது முற்போக்கு மற்றும் பழமைக்கு இடையே முரண்பாடு இல்லை என்ற உண்மையை நாம் உணர்கிறோம்.
சமூக சீர்திருத்தங்கள், தலித்கள் மற்றும் பிற்படுத்தப் பட்டோருக்கு பாடுதல் என்ற உண்மையான கோட்பாட்டை நாட்டுக்கு பரிச்சயமாக்கியவர் ஸ்ரீராமானுஜர். இன்று பிரம்மாண்டமான சமத்துவத்தின் சிலை வடிவில் சமத்துவச் செய்தியை அவர் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது செய்தியைத் தொடர்ந்து நாடு இன்று புதிய எதிர்காலத்திற்கு ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்ற அடித்தளத்தை அமைத்திருக்கிறது. எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரின் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் கூட்டாகப் பாடுபடுகிறோம். இதனால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் முழுமையான கௌரவத்துடன் நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாறியிருக்கிறார்கள். கான்கிரீட் வீடுகள், விலையில்லா சமையல் எரிவாயு இணைப்புகள், ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை, கட்டணமின்றி மின்சார இணைப்புகள், ஜன் தன் கணக்குகள், தூய்மை இந்தியா திட்டம் போன்றவை தலித்துகளையும், பிற்படுத்தப் பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் வலுப்படுத்தி யிருக்கின்றன என்று பிரதமர் கூறினார்.
இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒளிரும் ஊக்கமாக ஸ்ரீராமானுஜர் விளங்குகிறார் என்று பிரதமர் குறிப்பிட்டார். தெற்கே பிறந்த அவரின் செல்வாக்கு, தெற்கே இருந்து வடக்கேயும், கிழக்கே இருந்து மேற்கேயும் என இந்தியா முழுவதும் பரவியுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் விடுதலைப் போராட்டம் அதன் அதிகாரத்திற்கும், உரிமைகளுக்கும் மட்டுமானதாக இருக்கவில்லை. இந்தப் போராட்டத்தில் ஒரு பக்கம் காலனிய மனநிலையும், மறுபக்கம் வாழு, வாழவிடு என்ற கோட்பாடும் இருந்தது. ஒரு பக்கம் இது இன ஆதிக்கம் மற்றும் பொருள்முதல்வாத எண்ணமாக இருந்தது. மறு பக்கம் மனிதகுலம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான நம்பிக்கையாக இருந்தது. இந்த போராட்டத்தில் இந்தியாவும் அதன் பாரம்பரியமும் வெற்றி கொண்டது. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் துறவிகளிடமிருந்து பெறப்பட்ட சமத்துவம், மனிதாபிமானம், ஆன்மீகம் என்ற சக்தியால் நடத்தப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தச் சிலை தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், துத்தநாகம் என்ற ஐந்து உலோகங்களின் கலவையான பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது. உலகிலேயே அமர்ந்தநிலையில் உள்ள மிக உயரமான சி்லைகளில் ஒன்றாக இது உள்ளது. ‘பத்ர வேதி’ என பெயரிடப்பட்டுள்ள 54 அடி உயரம் உள்ள அடிப்படை கட்டிடத்தின் மீது இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இதன் தளங்களில் வேதம் குறித்த டிஜிட்டல் நூலகம், ஆராய்ச்சி மையம், பண்டைக்கால இந்திய நூல்கள், திரையரங்கம், ஸ்ரீராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும் கல்விக்கூடம் ஆகியவை அமைந்துள்ளன. ஸ்ரீராமானுஜாச்சார்ய ஆசிரமத்தின் ஸ்ரீசின்ன ஜீயர் சுவாமி கருத்தாக்கத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கைப் பயணம், போதனைகள் பற்றிய முப்பரிமாண வரைப்படக்காட்சி இடம் பெற்றது. சமத்துவச் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களைப் பிரதமர் பார்வையிட்டார்.
சமத்துவ சிலை திறப்பு தொடக்க நிகழ்வு, ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டையொட்டி நடைபெறும் 12 நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.
***************
(Release ID: 1795830)
Watch LIVEhttps://t.co/Zoy8tHV3eR
— PMO India (@PMOIndia) February 5, 2022
आज मां सरस्वती की आराधना के पावन पर्व, बसंत पंचमी का शुभ अवसर है।
— PMO India (@PMOIndia) February 5, 2022
मां शारदा के विशेष कृपा अवतार श्री रामानुजाचार्य जी की प्रतिमा इस अवसर पर स्थापित हो रही है।
मैं आप सभी को बसंत पंचमी की विशेष शुभकामनाएं देता हूं: PM @narendramodi
जगद्गुरु श्री रामानुजाचार्य जी की इस भव्य विशाल मूर्ति के जरिए भारत मानवीय ऊर्जा और प्रेरणाओं को मूर्त रूप दे रहा है।
— PMO India (@PMOIndia) February 5, 2022
रामानुजाचार्य जी की ये प्रतिमा उनके ज्ञान, वैराग्य और आदर्शों की प्रतीक है: PM @narendramodi
भारत एक ऐसा देश है, जिसके मनीषियों ने ज्ञान को खंडन-मंडन, स्वीकृति-अस्वीकृति से ऊपर उठकर देखा है।
— PMO India (@PMOIndia) February 5, 2022
हमारे यहाँ अद्वैत भी है, द्वैत भी है।
और, इन द्वैत-अद्वैत को समाहित करते हुये श्रीरामानुजाचार्य जी का विशिष्टा-द्वैत भी है: PM @narendramodi
एक ओर रामानुजाचार्य जी के भाष्यों में ज्ञान की पराकाष्ठा है, तो दूसरी ओर वो भक्तिमार्ग के जनक भी हैं।
— PMO India (@PMOIndia) February 5, 2022
एक ओर वो समृद्ध सन्यास परंपरा के संत भी हैं, और दूसरी ओर गीता भाष्य में कर्म के महत्व को भी प्रस्तुत करते हैं।
वो खुद भी अपना पूरा जीवन कर्म के लिए समर्पित करते हैं: PM
आज जब दुनिया में सामाजिक सुधारों की बात होती है, प्रगतिशीलता की बात होती है, तो माना जाता है कि सुधार जड़ों से दूर जाकर होगा।
— PMO India (@PMOIndia) February 5, 2022
लेकिन, जब हम रामानुजाचार्य जी को देखते हैं, तो हमें अहसास होता है कि प्रगतिशीलता और प्राचीनता में कोई विरोध नहीं है: PM @narendramodi
ये जरूरी नहीं है कि सुधार के लिए अपनी जड़ों से दूर जाना पड़े।
— PMO India (@PMOIndia) February 5, 2022
बल्कि जरूरी ये है कि हम अपनी असली जड़ो से जुड़ें, अपनी वास्तविक शक्ति से परिचित हों: PM @narendramodi
आज रामानुजाचार्य जी विशाल मूर्ति Statue of Equality के रूप में हमें समानता का संदेश दे रही है।
— PMO India (@PMOIndia) February 5, 2022
इसी संदेश को लेकर आज देश ‘सबका साथ, सबका विकास, सबका विश्वास, और सबका प्रयास’ के मंत्र के साथ अपने नए भविष्य की नींव रख रहा है: PM @narendramodi
विकास हो, सबका हो, बिना भेदभाव हो।
— PMO India (@PMOIndia) February 5, 2022
सामाजिक न्याय, सबको मिले, बिना भेदभाव मिले।
जिन्हें सदियों तक प्रताड़ित किया गया, वो पूरी गरिमा के साथ विकास के भागीदार बनें, इसके लिए आज का बदलता हुआ भारत, एकजुट प्रयास कर रहा है: PM @narendramodi
रामानुजाचार्य जी भारत की एकता और अखंडता की भी एक प्रदीप्त प्रेरणा हैं।
— PMO India (@PMOIndia) February 5, 2022
उनका जन्म दक्षिण में हुआ, लेकिन उनका प्रभाव दक्षिण से उत्तर और पूरब से पश्चिम तक पूरे भारत पर है: PM @narendramodi
भारत का स्वाधीनता संग्राम केवल अपनी सत्ता और अपने अधिकारों की लड़ाई भर नहीं था।
— PMO India (@PMOIndia) February 5, 2022
इस लड़ाई में एक तरफ ‘औपनिवेशिक मानसिकता’ थी, तो दूसरी ओर ‘जियो और जीने दो’ का विचार था: PM @narendramodi
इसमें एक ओर, ये नस्लीय श्रेष्ठता और भौतिकवाद का उन्माद था, तो दूसरी ओर मानवता और आध्यात्म में आस्था थी।
— PMO India (@PMOIndia) February 5, 2022
और इस लड़ाई में भारत विजयी हुआ, भारत की परंपरा विजयी हुई: PM @narendramodi
आज देश में एक ओर सरदार साहब की ‘Statue of Unity’ एकता की शपथ दोहरा रही है, तो रामानुजाचार्य जी की ‘Statue of Equality’ समानता का संदेश दे रही है।
— PMO India (@PMOIndia) February 5, 2022
यही एक राष्ट्र के रूप में भारत की विशेषता है: PM @narendramodi
पिछले वर्ष ही तेलांगना में स्थित 13वीं शताब्दी के काकातिया रूद्रेश्वर -रामाप्पा मंदिर को यूनेस्को विश्व धरोहर स्थल घोषित किया गया है।
— PMO India (@PMOIndia) February 5, 2022
वर्ल्ड टूरिज्म ऑर्गनाइजेशन ने पोचमपल्ली को भी भारत के सबसे बेहतरीन Tourism Village का दर्जा दिया है: PM @narendramodi
Statue of Equality will deepen our connect with the past and inspire the future generations. pic.twitter.com/6zgVBszKDq
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
रामानुजाचार्य जी के ज्ञान की एक अलग भव्यता है। साधारण दृष्टि से जो विचार परस्पर विरोधाभासी लगते हैं, रामानुजाचार्य जी उन्हें बड़ी सहजता से एक सूत्र में पिरो देते हैं। pic.twitter.com/gOP4qtSv2t
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
Important lessons from the life of Sri Ramanujacharya. pic.twitter.com/575Q4zDwfY
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
आज देश में एक ओर सरदार साहब की ‘Statue of Unity’ एकता की शपथ दोहरा रहा है, तो रामानुजाचार्य जी की
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
‘Statue of Equality’ समानता का संदेश दे रहा है। pic.twitter.com/L2NofS6f3t
Telugu culture has been enriched by noble Saints, Seers, inspiring rulers, thoughtful poets and now the vibrant Telugu cinema which is gaining global popularity. pic.twitter.com/MalnIK2BOQ
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
మహోన్నతులైన సత్పురుషులు, దార్శనికులు, స్పూర్తిదాయకులైన పాలకులు, మేధావులైన కవులు,ఇటీవల కాలంలో ప్రపంచవ్యాప్త ఆదరణ పొందుతున్న విరాజమానమైన తెలుగు సినిమా తెలుగు సంస్కృతిని సుసంపన్నం చేస్తున్నాయి. pic.twitter.com/qHihQQ2UkI
— Narendra Modi (@narendramodi) February 6, 2022