பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.07.2026) ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் தொடக்க விழாவின் சில காட்சிகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“பசுமைப் போக்குவரத்தை நோக்கி இந்தியா ஒரு பெரிய பாய்ச்சலை மேற்கொள்கிறது!”
“ஜிந்த் – சோனிபட் இடையே இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை ஜிந்தில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை, இந்திய ரயில்வேயில் செயல்திறனையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இது தற்சார்பு இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளச் சின்னமாக விளங்குகிறது.”
“ஹரியானாவின் ஜிந்த் நகரில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததில் நான் பெருமை கொள்கிறேன். இது, தூய்மையான, பசுமையான, தன்னிறைவு பெற்ற இந்தியாவைக் கட்டமைப்பதற்கான ஒரு முக்கிய மைல்கல் ஆகும். அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ரயில், இந்தியாவின் தொழில்நுட்ப ஆற்றலுக்கு அடையாளமாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு முன்மாதிரியாகவும் விளங்குகிறது.”
“ஜிந்த் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களில் ஹரியானாவைச் சேர்ந்த என் குடும்ப உறுப்பினர்களின் ஆர்வம் புதிய ஆற்றலால் நிரம்பியிருந்தது.”
“ஜிந்த் – சோனிபத் இடையே நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தொடங்கப்பட்டது, 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தை நோக்கிய இந்தியாவின் ஒரு முக்கிய படியாகும். இந்த ரயிலின் ஆற்றலைக் கேட்கும்போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்படுவார்!”
“2014-க்கு முந்தைய நிலைமை இருந்திருந்தால், உலகளாவிய எண்ணெய் நெருக்கடி இந்தியாவின் ரயில்வே அமைப்பை முடக்கியிருக்கும். ஆனால், எங்கள் அரசு தொலைநோக்குடன் சிந்தித்துத் தீர்வுகளைச் செயல்படுத்துகிறது, அதன் பலன்களை நாடு கண்டு வருகிறது.”
“ஹரியானாவின் இரட்டை இன்ஜின் அரசு, மாநிலத்தின் புதல்விகளுக்கும் புதல்வர்களுக்கும் சாத்தியமான அனைத்து விளையாட்டு வசதிகளையும் வழங்கி வருகிறது.”
(Release ID : 2285869)
****
TV/PLM/SH
India takes a major leap towards green mobility!
— Narendra Modi (@narendramodi) July 17, 2026
In Jind, flagged off India’s first indigenous hydrogen-powered train between Jind and Sonipat.
This remarkable achievement reflects the ingenuity and dedication of the Indian Railways team. It is a proud symbol of Aatmanirbhar… pic.twitter.com/hVo89u5vvI

जींद के विकास कार्यक्रम में हरियाणा के अपने परिवारजनों का उत्साह नई ऊर्जा से भर गया। pic.twitter.com/rEYJaiXs2k
— Narendra Modi (@narendramodi) July 17, 2026
जींद से सोनीपत के बीच शुरू हुई देश की पहली हाइड्रोजन ट्रेन 21वीं सदी की टेक्नोलॉजी की दिशा में भारत का एक बड़ा कदम है। इस ट्रेन के सामर्थ्य के बारे में सुनकर हर देशवासी को बहुत गर्व होगा! pic.twitter.com/KCkeftRuk4
— Narendra Modi (@narendramodi) July 17, 2026
आज अगर 2014 से पहले की स्थिति होती तो वैश्विक तेल संकट से भारत की रेल व्यवस्था ठप पड़ जाती। लेकिन हमारी सरकार बहुत पहले सोचती भी है और समस्या का समाधान भी जमीन पर उतारती है, जिसके सुपरिणाम देश देख रहा है। pic.twitter.com/DYRAb4tUEy
— Narendra Modi (@narendramodi) July 17, 2026
हरियाणा की डबल इंजन सरकार स्पोर्ट्स में भी यहां के बेटे-बेटियों को हर सुविधा दे रही है। आने वाली महत्वपूर्ण स्पर्धाओं के लिए राज्य के युवा साथियों से मेरा यह विशेष आग्रह… pic.twitter.com/XtQONRPr8m
— Narendra Modi (@narendramodi) July 17, 2026